தாஜ்மஹால் பற்றிய ரகசியங்கள் | Amazing Facts For Taj Mahal in Tamil
உலகின் 7 அதிசங்களில் ஒன்றான தாஜ்மஹால் பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம். காதல் சின்னமான தாஜ்மஹால் எப்படி கட்டப்பட்டது சிமெண்ட் இல்லாமல் எப்படி இவ்வளவு கம்பீரமாக காட்சி அளிக்கிறது என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்..! சரி அதற்கு முன் சிமெண்ட் இல்லாமல் எதை வைத்து அதனை கட்டினார்கள் என்பதை தெரிந்துகொள்ள 👉👉👉 தாஜ்மஹால் எந்த சிமெண்டால் கட்டப்பட்டது தெரியுமா..?
தாஜ்மஹால் பற்றிய தகவல்கள்:
முகலாயர்களின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்குவது தாஜ்மஹால் தான். இந்த தாஜ்மஹால் கி.பி 17 நூற்றாண்டில் முகலாய மன்னரான ஷாஜஹான் அவருடைய 3 காதல் மனைவிக்காக கட்டப்பட்டது.
ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைத்துள்ள இந்த தாஜ்மஹால் உலகின் காதல் சின்னமாக இன்றும் திகழ்கிறது.
மும்தாஜின் உண்மையான பெயர் அர்ஜுமன் பானு பேகம் ஆகும். இவர் ஹாஜகானை திருமணம் செய்யும் போது அவருடைய பெயரை மும்தாஜ் மஹால் என்று மாற்றிக் கொண்டார்.
ஷாஜகான் தன்னுடைய மூன்று மனைவியில் மும்தாஜை அதிகமாக விரும்பியதாக சொல்லப்படுகிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 தாஜ்மஹால் உண்மை வரலாறு
மும்தாஜ் அவருடைய 39 வயதில் 14 -வது குழந்தையை பெற்று எடுக்கும் போது இறந்துவிட்டார்.
அவருடைய கல்லறையாக ஷாஜஹான் 21 ஆண்டுகளுக்குள் தாஜ்மஹாலை கட்டிமுடித்தார்.
தாஜ்மஹாலை அவர் கருப்பு நிறத்தில் கட்ட நினைத்தாக கூறப்படுகிறது. ஆனால் அதனை வெள்ளை நிறத்தில் கட்டிமுடித்தார்.
பிரம்மாண்டமாக உள்ள தாஜ்மஹாலில் சில ரகசிய அறைகளும் பாதாள சுரகங்களும் உள்ளன. அது இன்று பயன்பாட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
தாஜ்மஹாலின் உள் பக்கம் ஒரு நீரோடை உள்ளது. இன்று வரை அதற்கு எங்கு நீர் வருகை இருக்கிறது என்று இன்று வரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
தாஜ்மஹால் அடிப்பகுதி மரப்பட்டையால் ஆனது. அது யமுனை ஆற்றின் நீரினால் ஊறிக்கொண்டு தான் வருகிறது.
தாஜ்மஹாலில் உள்ள கல்லறை 2 வகையான விலைமதிப்பு அதிகம் உள்ள கல்லால் கட்டப்பட்டது. இதனை கட்டுவதற்கு 1000 -திற்கும் மேற்பட்ட யானைகளை அவர் பயன்படுத்தி உள்ளார்.
எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அது ஒரே கோணத்தில் உள்ளதை போல் கட்டப்பட்டுள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |