சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது..?

Advertisement

International Firefighters Day 2024

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக இவ்வுலகில் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு ஒவ்வொரு துறைகள் இருக்கின்றன. அப்படி தன் உயிரையும் கொடுத்து மற்றவர்களுக்காக உழைக்கும் துறைகளில் பணிபுரிபவர்கள் தான் தீயணைப்பு வீரர்கள். அதுபோல நாட்டிற்காக பாடுபடுபவர்களை போற்றுவதற்கு ஒரு நாள் இருக்கும். அந்த வகையில் தீயணைப்பு வீரர்களை போற்றும் விதமாக ஓர் நாள் இருக்கிறது. அது எந்த நாள் என்று இப்போ காணலாம் வாங்க.

தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு கலர்ல இருக்குனு உங்களுக்கு தெரியுமா..

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் எப்போது..? 

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் எப்போது

பொதுவாக எங்காவது தீ விபத்து ஏற்பட்டு விட்டால், முதலில் வருவது தீயணைப்பு வீரர்கள்  தான். இவர்களுக்கு எப்போதாவது தான் வேலை என்றாலும், இவர்களின் வேலையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

தீயணைப்பு துறையினர் தன் உயிரையும் பணையம் வைத்து தான் வேலை செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி எல்லாவற்றையும் விட மேலானது தான்.

இப்படி தீயணைப்பு வீரர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4 ஆம் தேதி அன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் அதாவது (International Firefighters Day) சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தீயணைப்பு வீரர்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது..? 

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் எப்போது

இந்த சர்வதேச அளவில் தீயணைப்பு வீரர்களின் சேவைக்காகவும், சேவையின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களை நினைவுகூறும் விதமாக தான் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அதாவது, செப்டம்பர் 11 தாக்குதல்களில் இறந்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறும்  வகையிலும், டிசம்பர் 2, 1998 அன்று ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை எதிர்த்து ஐந்து தீயணைப்பு வீரர்கள் இறந்ததைத் தொடர்ந்தும், ஜனவரி 4, 1999 அன்று ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர் ஜே.ஜே. எட்மண்ட்சன் முன்மொழிந்த பிறகு தான் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதாவத, டிசம்பர் 2, 1998 அன்று ஆஸ்திரேலியாவின் லிண்டன் நகரில் ஒரு சோகமான சம்பவத்திற்குப் பிறகு தான் இந்த சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் உருவானது. இந்த பயங்கரமான சம்பவத்தில், காட்டுத் தீயை அணைக்க முயன்ற 5 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

கேரி வ்ரெட்வெல்ட், கிறிஸ் எவன்ஸ், ஸ்டூவர்ட் டேவிட்சன், ஜேசன் தாமஸ் மற்றும் மேத்யூ ஆம்ஸ்ட்ராங் ஆகிய 5 தீயணைப்பு வீரர்களும் வேலைநிறுத்தக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர் மற்றும் SOS அழைப்பில் கலந்துகொள்ள காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக 5 பேரும் தீயை எதிர்த்துப் போராடி இறந்தனர். இந்த சோகத்திற்குப் பிறகு, ஜனவரி 4, 1998 அன்று, துணிச்சலான தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கவும், தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தவும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு முன்மொழிவு அனுப்பப்பட்டது.

அதன் பிறகு தான், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4 ஆம் தேதி அன்று (International Firefighters Day) சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement