சர்வதேச விதவைகள் தினத்தின் கருப்பொருள் 2024 மற்றும் வரலாறு..!

Advertisement

International Widows Day Theme 2024 in Tamil | International Widows Day History  in Tamil

International Widows Day Dates 2024: வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சர்வதேச விதவைகள் தினம் எப்போது 2024.? அதன் கருப்பொருள் என்ன.? மற்றும் அதன் வரலாறு என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், விதவைகளின் கஷ்டங்களையும், அவர்களின் பெருமையும் எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 ஆம் தேதி உலக சர்வதேச விதவைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக சர்வதேச விதவைகள் தினம் (IWD) என்பது உலகளவில் விதவைகளின் அவல நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காகவும் அனுசரிக்கப்பட்ட நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் International Widows Day ஒரு கருப்பொருள் அமைத்து கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த ஆண்டிற்கான சர்வதேச விதவைகள் தினத்தின் கருப்பொருள் 2024  மற்றும் அதன் வரலாறு என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

International Widows Day Theme 2024 in Tamil:

2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச விதவைகள் தினத்தின் கருப்பொருள் “Accelerating the Achievement of Gender Equality.” என்பதாகும். அதாவது, “பாலின சமத்துவத்தின் சாதனையை விரைவுபடுத்துதல்”. என்பதாகும்.

விதவை பெண் கனவில் வந்தால்

International Widows Day History  in Tamil:

  • 1827 ஆம் ஆண்டுக்கு முன், விதவைகள் தங்கள் மறைந்த கணவரின் இறுதிச் சடங்கில் தீக்குளித்துக் கொள்ள வேண்டியிருந்த நிலை இருந்தது. அதன் பிறகு, 2005 ஆம் ஆண்டில், ஜூன் 23 ஆம் தேதி அன்று, 1954 ஆம் ஆண்டில் விதவையான லூம்பாவின் தாயாரின் நினைவாக லூம்பா அறக்கட்டளை ஆனது சர்வதேச விதவைகள் தினத்தை நிறுவியது.
  • முதன்முதலில் சர்வதேச விதவைகள் தினம் ஆனது, ஐக்கிய நாடுகள் சபையால் 2011 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அன்று நிறுவப்பட்டது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, ஒரு தீர்மானத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக International Widows Day அங்கீகரித்தது.
  • இந்நாள், விதவைகளின் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை எடுத்துக்காட்டவும், குறிப்பாக வளரும் நாடுகளில், அவர்கள் அடிக்கடி பாகுபாடு, வறுமை போன்றவற்றை எதிர்கொள்ளுவதையும் எடுத்துரைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.
  • முக்கியமாக, ராஜ் லூம்பா தலைமையிலான லூம்பா அறக்கட்டளை உட்பட பல்வேறு அமைப்புகள் சேர்ந்து அயராது முயற்சி செய்து சர்வதேச விதவைகள் தினம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விதவைகள் தினத்தின் முக்கியத்துவம்:

சர்வதேச விதவைகள் தினம் (ஜூன் 23) என்பது உலகெங்கிலும் உள்ள விதவைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.

சர்வதேச விதவைகள் தினம், விதவைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவர்களுக்காக சமத்துவமான உலகத்தை உருவாக்குவதற்கும் தொடர்ச்சியான பணிகளின் நினைவூட்டலாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், விதவைகள் சமுகத்தில் எதிர்கொள்ளும்  பின்னடைவு, வலிமை மற்றும் பங்களிப்புகளை மதிக்கவும் அங்கீகரிக்கவும் ஒரு அறிய வாய்ப்பாகவும் இந்நாள் திகழ்கிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement