இன்வெர்ட்டர் வாங்க போறீங்களா? அப்டினா இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Inverter Buying Tips in Tamil

Inverter Buying Tips in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் இன்வெட்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி தான் பகிர்ந்துள்ளேன். இந்த கோடை கால வெப்பம் சுட்டெரிக்கும் வேளையில், மின்வெட்டு பிரச்சனைகளும் இதனுடனே தொற்றிக்கொள்ளும். இதனை போக்கும் ஒரே வழி இன்வெர்ட்டர் ஆகும். இந்த சூழலில், புதிதாக இன்வெர்ட்டர் வாங்க போகிறீர்கள் என்றால், நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. அவை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இன்வெர்ட்டர் இயங்கும் முறை – Inverter Buying Tips in Tamil:

இன்வெர்ட்டர் எப்போதும் 100% விழுக்காடு செயல்திறனுடன் இயங்காது. மாறாக, இது 50 முதல் 80 விழுக்காடு சக்தியை மட்டுமே வெளிப்படுத்தும். இன்வெர்ட்டரின் செயல்திறன் 70% ஆக இருந்தால், இன்வெர்ட்டரின் சக்தி காரணி 0.7 ஆகவும், அது 80% ஆக இருந்தால், சக்தி காரணி (Power Factor – பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு) 0.8 ஆகவும் இருக்கும்.

நாம் பார்க்கும் இன்வெர்ட்டரின் சக்தி காரணி 0.7 என்று வைத்துக் கொள்வோம். சக்தி காரணிக்குப் பிறகு, வோல்ட் ஆம்பியர் மதிப்பீட்டைச் சரிபார்க்க எளிதாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இன்வெர்ட்டரின் சக்தி காரணிக்கு தேவையான வோல்டேஜை பிரிப்பதுதான்.

V/A மதிப்பீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் – Inverter Buying Tips in Tamil:

சரியான இன்வெர்ட்டரைத் தேர்வு செய்ய, உங்கள் V/A மதிப்பீட்டைக் (வோல்ட் / ஆம்பியர்) கண்டுபிடிக்க வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தேவையான வோல்ட் / ஆம்பியர் மதிப்பீடு என்பது உங்களுக்கு பிடித்த இன்வெர்ட்டரின் சக்தி காரணியால் வகுக்கப்படும் சக்தியாகும்.

தேவையான சக்தி என்பது கணக்கிடப்பட்ட வாட்களின் எண்ணிக்கை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்வெர்ட்டரின் சக்தி காரணி பொதுவாக இன்வெர்ட்டர் செயல்படும் திறனைப் பொறுத்திருக்கும். இன்வெர்ட்டரை வாங்கும் முன் இதைக் கவனியுங்கள்.

இன்வெர்ட்டரில் என்னென்ன மின் சாதனங்களை இயக்கலாம்
எடுத்துக்காட்டாக, ஒரு 25W திறன்கொண்ட மின்விசிறி, ஒரு 60W டிவி, நான்கு 20W LED பல்புகளுக்கு மட்டுமே இன்வெர்ட்டர் தேவை என்று வைத்துக்கொள்வோம். மொத்த தேவையான வாட் 25 + 60 + 40 + 40 ஆக இருக்கும். இதை கூட்டினால் 165W வரும்.

எதிர்காலத்தில் இன்வெர்ட்டரில் கூடுதல் பிளக் பாயிண்ட்கள் அல்லது மின்னணு பொருள்களை சேர்க்கலாம் என நீங்கள் நினைத்தால், உங்களுக்கு கூடுதலாக 100W தேவைப்படலாம். மொத்தமாக உங்களுக்கு 265W திறனுள்ள மின் சாதனங்களை இயக்கும் இன்வெர்ட்டர் பேட்டரி தற்போது தேவை என எடுத்துக் கொள்ளலாம்.

இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரியை எப்படி தேர்வு செய்வது? – Inverter Buying Tips in Tamil:

இன்வெர்ட்டரை வாங்கும் போது சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். சரியான விதி என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்படும் இன்வெர்ட்டர், மின்வெட்டு நேரத்தில் நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

உங்களுக்குத் தேவைப்படும் வாட்ஸை விட சற்று அதிகமான திறன்கொண்ட இன்வர்ட்டரை தேர்வு செய்ய வேண்டும். இப்படி செய்தால், அதிக மின்சேமிப்புக் கொண்ட பேட்டரிகளை இணைக்க முடியும். பேட்டரியைப் பொருத்தவரை அதிக காலம் உத்தரவாதம் வரும் பேட்டரிகளையே தேர்வு செய்ய வேண்டும்.

குறுகிய காலம் உத்தரவாதம் கொண்ட பேட்டரிகளில் உள்ள மூலப்பொருள்களின் தரம் சற்றுக் குறைவாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். இப்போது உங்களுக்கு 265W திறன்கொண்ட மின்னணு பொருள்களை இயக்க வேண்டும் என்றால், கடைக்கு சென்று அதனை இயக்கும் அளவு திறன் கொண்ட இன்வெர்ட்டரை குறித்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

பின்னர், சற்று அதிகமாக சக்தியை வெளிப்படுத்தும் இன்வெர்ட்டர் குறித்து கேளுங்கள். எப்போதும் டியூபுலார் பேட்டரிக்கு முன்னுரிமை அளியுங்கள். இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரி விஷயத்தில் சமரசம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், அது வீண் செலவை வருத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Eb பில் போன் மூலம் கட்டுவது எப்படி

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com
SHARE