ISRO Gaganyaan Mission
இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, உலகின் பார்வை இப்போது இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது. அந்த வெற்றிக்கு பிறகு உடனடியாக அடுத்த எல்லைக்கு ISRO சென்றுவிட்டது. அதாவது ஆதித்யா L1 விண்கலம் சூரியனை நோக்கி சென்றுள்ளது. அதன் வெற்றி ஏறக்குறைய 90 % வெற்றி அடைந்து விட்டது. ஆனால் ISRO விஞ்ஞானிகள் தங்களது முயற்சிகளை கைவிடவில்லை. ISRO விஞ்ஞானிகள் விண்வெளி துறையில் தங்களது முயற்சிகளில் ஏற்படும் தோல்விகளில் இருந்து புதிய பாடத்தை கற்றுக்கொண்டு அடுத்த இலக்கை நோக்கி பயணத்தை மிகவும் வெற்றிகரமாக முடித்துள்ளனர். ISRO விஞ்ஞானிகள் தங்களது முயற்சிகளை கைவிடாமல் தங்களது அடுத்தடுத்த திட்டத்தை வகுத்துவருகின்றனர். வரும் காலங்களில் விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனைகள், சந்திராயன் 3, ஆதித்யா L1 ஆகியவற்றை விஞ்சும்ம் வகையில் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அந்தவகையில் இந்தியாவின் அடுத்த இலக்கு ககன்யான். அதாவது விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் விண்கலத்திற்கான இறுதிக்கட்ட பணியில் உள்ளன. ISRO மேற்கொள்ள போகும் ககன்யான் திட்டத்தை பற்றி முழு விவரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளவோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ககன்யான் மிஷன்
ககன்யான் மிஷன் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயண முயற்சிக்கு பயன்படுத்தும் ஒரு விண்கலம் ஆகும்.
ககன்யான் மிஷன் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளி சுற்றுப்பாதையில் பாதுகாப்பாக அனுப்புவதற்கான முதன்மை நோக்கமாகும்.
மனிதர்கள் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்கும் எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு சென்று ஆய்வுகளை முயற்சி செய்வதற்கும் அடித்தளமாக இந்தியா தனது திறனை சோதித்து நிரூபிப்பதேககன்யான் மிஷனின் நோக்கமாகும்.
ககன்யான் விண்கலம் மூன்று நபர்களை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ISRO, தனது முதல் முயற்சியாக இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட குழுவினரை 7 நாட்கள் வரை 400 கிமீ உயரத்தில் இஸ்ரோவின் எல்விஎம்3 ராக்கெட்டின் மூலம் பூமியைச் சுற்றி வர டிசம்பர் 2021-ல் திட்டமிடப்பட்டது. ககன்யான் -1 2024-ல் தனது பயணத்தை தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
ககன்யான் மிஷனின் முக்கிய நோக்கங்கள்:
இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திறனை நிரூபிக்க ககன்யான் மிஷன் பணிகளை வெற்றிகரமாக முடிப்பது. இதன் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இணைந்து, இந்தியாவின் தொழில்நுட்ப வலிமை மற்றும் அறிவியல் முன்னேற்றத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றுவது.
மனிதனின் விண்வெளிப் பயண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ககன்யான் மிஷன் மூலம் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி, spacecraft மேம்பாடு, அவசரகால நடைமுறைகள் மற்றும் புதிய தொழிலுட்பங்கள் போன்ற மனித விண்வெளிப் பயணத்தின் பல்வேறு அம்சங்களில் மதிப்புமிக்க பல நுண்ணறிவை பிற்கால திட்டங்களுக்கு சேமிப்பது.
நுண் புவியீர்ப்பு சூழல்களில் அறிவியல் சோதனைகள், பொருள் அறிவியல், மருந்து மேம்பாடு மற்றும் அடிப்படை இயற்பியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்க்கு இந்த ககன்யான் திட்டம் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்.
ஆதித்யா L1 குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் புதிய அப்டேட் வந்தாச்சு என்ன தெரியுமா..?
அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஊக்கமளிக்கும்: ககன்யான் மிஷன் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை தூண்டவும் விண்வெளி துறையில் எதிர்கால திட்டங்களை ஊக்குவிக்கவும் ககன்யான் மிஷன் ஒரு சிறந்த திடமாக இருக்கும்.
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார போட்டித்தன்மையை அதிகரிக்க ககன்யான் மிஷன் வெற்றி மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ககன்யான் மிஷன் வெற்றி இந்தியாவின் தொழில்நுட்ப நற்பெயரை மேம்படுத்தும் மற்றும் விண்வெளித் தொழில்களில் முதலீட்டை ஈர்க்கும், இநதியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் பெரும் பங்களிக்கும்.
செயற்கை மழையை உருவாக்குவது எப்படி தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |