ஜமுக்காளம் பெயர் பெற்ற ஊர்
பொதுவாக ஒவ்வொரு பொருளும் ஒரு ஊரில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதாவது, ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொருள் பெயர் பெற்று இருக்கும். எனவே, அப்படி தமிழ்நாட்டில் ஜமுக்காளத்திற்கு பெயர் பெற்ற ஊர் ஒன்று உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம் வாங்க.
ஜமுக்காளம் என்பது மிகவும் முக்கியமான பொருள் என்று நம் அனைவர்க்கும் தெரியும். அனைவரது வீட்டிலும் ஜமுக்காளம் என்பது இருக்கும். இப்படி நமக்கு முக்கியமான பொருளாக பயன்படும் ஜமுக்காளம் எந்த ஊருக்கு பெயர் பெற்றது என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா.? வாருங்கள் ஜமுக்காளம் பெயர் பெற்ற ஊர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Jamakkalam Famous Place in Tamilnadu:
ஜமுக்காளத்திற்கு பெயர் பெற்ற ஊர் பவானி ஆகும். பவானி என்ற ஊர் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். பவானில் ஜமுக்காளம் என்று சொல்லக்கூடிய போர்வைககளும் விரிப்புகளும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
பவானியில் இரு வகையான ஜமுக்காளங்களை தயாரித்து வருகிறார்கள். ஒன்று பருத்தி நூல்களைக் கொண்ட விரிப்புகள் மற்றொன்று செயற்கை பட்டு நூல்களை கொண்ட ஜமுக்காளம் ஆகும். ஜமக்காளத்தை குழித்தறி என்னும் கைத்தறி கொண்டு நெய்கிறார்கள். பவானியில் தயாரிக்கப்படும் ஜமுக்காளம் ஆனது, சுவீடன், ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தவிலுக்கு எந்த ஊர்காரர் பிரசித்தம்
புவியியல் சார்ந்த குறியீடு பெற்ற பவானி:
இந்திய அரசு 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் பவானியை புவியியல் சார்ந்த குறியீடாக அங்கீகரித்தது.
ஜமுக்காளத்தின் சிறப்புகள்:
தரை விரிப்புகள் அல்லது படுக்கை விரிப்புகள் என்று சொல்லப்படும் ஜமுக்காளம் மிகவும் தடிமனாக இருக்கும். வண்ண வண்ண நிறங்களில் கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகளுடன் அழகாக இருக்கும். சாயம், நெசவு, வடிவமைப்பு எல்லாம் ஒரு கைவினை மரபைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டு தரமான வடிவமைப்பை கொண்டிருக்கும். பவானி சுற்று வட்டாரத்தில் உள்ள குருப்பநாய்க்கான்பாளையம், சேத்துநாம்பாளையம், பெரிய மூலப்பாளையம் பகுதியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஜமக்காளத் தொழிலை செய்து வருகிறார்கள். பவானி சுற்று வட்டாரத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் ஜமுக்காளம் தயார் செய்யப்பட்டு வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யபட்டு வருகிறது.
ஜமுக்காளம் in English:
ஜமுக்காளம் ஆங்கிலத்தில் CARPET, RUG போன்ற பெயர்களில் என்று கூறுவார்கள்.
ஊரின் பெயர்கள் மற்றும் சிறப்பு உணவுகள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |