ஜவஹர்லால் நேரு பற்றிய பேச்சு போட்டி | Jawaharlal Nehru Speech in Tamil..!
தமிழகத்தை பொறுத்தவரை எண்ணற்ற பண்டிகை மட்டும் கொண்டாடப்படுவது அல்ல. இதற்கு மாறாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என இவர்களையும் பெருமிதம் கொள்ளும் விதமாகவும், சிறப்பிக்கும் விதமாகவும் பல தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி பார்க்கையில் இன்றைய தினம் என்ன தினம் என்றும், யாருக்கான தினம் என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கு இருக்கும். இதன் படி பார்க்கையில் நவம்பர் மாதம் 14-ஆம் தேதி ஆனது குழந்தைகளுக்கான தினமாக இருக்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் நேருவின் பிறந்த நாளினையே அனைவரும் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறது. ஆகவே இன்றைய பதிவில் ஜவஹர்லால் நேரு பற்றிய பேச்சு போட்டியினை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நேரு பற்றிய பேச்சு போட்டி தமிழ்:
முன்னுரை:
இன்றளவிலும் உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 14-ஆம் தேதியினை குழந்தைகள் தினமாக கொண்டாடிவருகிறறோம். இப்படிப்பட்ட நேரு அவர்கள் இந்திய நாட்டின் முதல் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதோடு மட்டும் இல்லால் இந்திய பிரதமராகிய நேருவை குழந்தைகள் அனைவரும் செல்லமாக மாமா என்று தான் அழைத்தார்கள்.
நேருவின் பிறப்பு முதல் கல்வி வரை:
உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் என்னும் ஊரில் 1889-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி அன்று நேரு பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் மோதிலால் நேரு மற்றும் ஸ்வரூபராணி அம்மையார் ஆவர். மேலும் இவருக்கு விஜயலக்ஷ்மி மற்றும் பண்டித் கிருஷ்ணா என்ற இரண்டு சகோதர்களும் இருந்தனர்.
நேரு அவர்கள் ஆரம்ப கல்வியை சிறந்த முறையில் கற்று தேர்ந்து அடுத்தக்கட்ட நிலையாக கல்லூரி படிப்பினை முதல் நிலையாக 1910-ஆம் ஆண்டு இயற்கை அறிவியல் படிப்பினை ட்ரினிட்டி கல்லூரியில் படித்தார்.
மேலும் நேரு இதனை தொடர்ந்து கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த விட்டு 1912-ஆம் ஆண்டில் இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்தார். 1962 –ஆம் ஆண்டு இந்த படிப்பினையும் நல்ல முறையில் படித்து விட்டு அவரது பணியினை தொடங்க இந்தியாவிற்கும் வந்தார்.
நேரு திருமண வாழ்க்கை:
1916- ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அவர்கள் பிராமின் இனத்தினை சேர்ந்த கமலா என்ற பெண்ணை மனம் முடித்தார். இவருக்கு இந்திராபிரியதர்ஷனி என்ற ஒரு மகளும் இருக்கிறாள்.
சுதந்திரத்தில் நேருவின் பங்கு:
சுதந்திரத்தை பொறுத்தவரை நேருவின் பணிகள் என்பது எண்ணிலடங்காவையாக இருக்கிறது. அதாவது லக்னோவில் நடைபெற்ற ஒரு காங்கிரஸ் கூட்டத்தின் போது மகாத்மா காந்தி அவர்களை 1916-ஆம் ஆண்டில் நேரில் சந்தித்தார்.
இதனை தொடர்ந்து 1921-ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கு ஏற்று சிறைக்கு சென்றார். சிறையில் இவரது வாழ்க்கை காலம் என்பது சுமார் 9 வருடங்களாக இருந்தது.
பல போராட்டங்களுக்கு பிறகு பெற்ற சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் பிரதமராகவும் தேர்தலில் நின்று வெற்றியும் அடைந்தார்.
ஜவஹர்லால் நேருவும் குழந்தைகளும்:
குழந்தைகள் அனைவரும்இவரை மாமா என்று சொல்லி அழைக்கும் அளவில் பேரன்பு கொண்ட ஒருவராக இவர் திகழ்ந்தார். குழந்தைகளின் மீது உள்ள இத்தகைய பாசத்தினை நல்ல விதமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு உணவு வழங்கும் திட்டம், கல்வி திட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கும் திட்டம் என இவற்றை எல்லாம் நடைமுறை படுத்தினார்.
குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது:
இந்தியாவை பொறுத்தவரை குழந்தைகள் தினம் என்பது 1956-ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 20-ஆம் தேதி அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ஜவஹர்லால் நேரு அவர்கள் இறந்த பிறகு நவம்பர் 20-க்கு பதிலாக 14-ஆம் தேதி அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேருவின் சிறப்பு பெயர்கள்:
- நேரு மாமா
- பண்டிட் நேரு
- பண்டிதர் நேரு
- இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடி
- பண்டிதர் ஜவஹர்லால் நேரு
- சுகந்திர போராட்ட வீரர்
- நவீன இந்தியாவின் சிற்பி
முடிவுரை:
குழந்தைகள் மீதும், நாட்டின் மீதும் உள்ள பற்றினை நல்ல முறையில் நல்ல நோக்கத்தோடு வெளிப்படுத்தும் விதமாக பலப்பல திட்டங்களை அறிமுகம் செய்து நீங்க இடம் பிடித்தார்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் 1964-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு அவர்கள் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
தொடர்புடைய பதிவுகள் 👇👇 |
ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு |
நவீன இந்தியாவின் சிற்பி யார் தெரியுமா |
ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய புத்தகங்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |