ஜீவகாருண்யம் என்றால் என்ன.? | Jeevakarunyam Meaning in Tamil

Advertisement

Jeevakarunyam Meaning in Tamil

பொதுவாக நாம் அனைவருமே நமக்கு தெரியாத பல விசயங்களை தெரிந்துகொள்ள நினைப்போம். அப்படி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று தான் ஜீவகாருண்யம். ஜீவகாருண்யம் என்ற வார்த்தையை நாம் பெரும்பாலான இடங்களில் கேட்டு இருப்போம். ஆனால், அதனை பற்றி நமக்கு தெரியாது. ஆகையால், ஜீவகாருண்யம் பற்றி இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

ஜீவகாருண்யம் என்பது இரக்கம் என்று பொருள்படுகிறது. இதில் இரக்கம் என்பது எதனை குறிக்கிறது. ஜீவகாருண்யம் என்றால் என்ன.? என்பதை விவரமாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Alpha Male என்றால் என்ன?

ஜீவகாருண்யம் பொருள்:

ஜீவகாருண்யம் = ஜீவன் + காருண்யம்

ஜீவகாருண்யம் என்பது, அணைத்து உயிரினங்களிடம் இரக்கம் காட்டுவது ஆகும். ஈயோ எறும்போ அதனை துன்புறுத்தாமல் கருணையாக இருப்பது ஆகும். உலகில் வாழும் அணைத்து உயிரினங்களையும் துன்புறுத்தாமல், கொள்ளாமலும் அவற்றின் மீது இரக்கம் கொண்டு அவற்றைக் கொல்வது மகாபாவம் என்ற எண்ணத்தோடு வாழ்ப்பவர்கள் ஜீவகாருண்யம் மிக்கவர்கள்.

“இறைவனுடைய அருளைப் பெற வேண்டும் என்றால் உயிர்கள் மீது அன்பு, தயவு, கருணை, இரக்கம் காட்ட வேண்டும்” என்கிறார் வள்ளலார். வள்ளலார் சுவாமிகள் இயற்றிய முதல் நூல், “ஜீவகாருண்ய ஒழுக்கம்” ஆகும்.

அருட்பிரகாச வள்ளலார் தருமச்சாலையை 1867 ஆம் ஆண்டு நிறுவி சுவாமிகள் அன்று ஏற்றி வைத்த அடுப்பு இன்றும் அணையாமல், பசித்தவர்களின் பசியை போக்கி வருகின்றது.

ஜீவகாருண்ய ஒழுக்கம்:

ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது, மனிதன் வேற்று நாட்டினரிடத்தும் மற்றும் வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு, இரக்கம் கொள்வதே ஆகும். எந்த நேரத்திலும் மாமிச உணவுகளை உண்ணக்கூடாது. தம்மைப்போல், ஆடு, மாடு, கோழி போன்ற அணைத்து உயிரினங்களும் உயிருள்ளது என்பதை அறிய வேண்டும். இவ்வாறு இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் தம்மைப்போல் என நினைத்து அதனை துன்புறுத்தாமல் இருப்பது ஆகும்.

ஜீவகாருண்யம் in english:

Compassion for all Living Creatures

உங்களுக்கு குடவோலை முறை என்றால் என்ன தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement