ஜூலை 15 என்ன தினம்
ஜூலை 15-ஆம் தேதி என்ன தினம் என்று உங்களில் யாருக்காவது ஞாயபகம் இருக்கிறதா..? ஒருவேளை நீங்கள் அன்றைய தினத்தின் சிறப்பினை மறந்து விட்டீர்கள் என்றால் அதனை மீண்டும் ஒரு முறை நினைவுக் கூறுவதற்கு இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் ஜூலை 15-ல் பிறந்தநாள் காணும் கர்ம வீரர் காமராஜர் அவர்களை பற்றிய ஓரிரு வரிகளை தான் பார்க்கப்போகிறோம். மேலும் இத்தகைய நாளினை தான் தமிழக்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாகவும் கொண்டாடி வருகிறார்கள். ஆகவே பதிவை தொடர்ந்து படித்து இதர தகவலையும் தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
July 15 Special Day in Tamil nadu:
காமராஜரின் பிறப்பு:
1903-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் மகனாய் ஜூலை மாதம் 15-ல் பிறந்தவர் தான் காமராஜர்.
காமராஜருக்கு பெற்றோர் இட்ட பெயர் என்னவோ காமாட்சி என்பதாக இருந்தாலும் கூட சிவகாமி அம்மாள் மட்டும் தன் மகனை அன்பாக ராசா என்று அழைத்து வந்தார். ஆனால் காலத்தின் மாற்றமும் காமாட்சி செய்த எண்ணற்ற வளர்ச்சியும் இவருடைய பெயரை நாளடைவில் காமராஜர் என்று மாற்றி அமைத்தது.
பள்ளி படிப்பு:
இவர் தனது ஆரம்பக்கால கல்வியினை த்ரிய வித்யா சாலா பள்ளியில் படிக்க தொடங்கினார். ஆனால் குடும்ப ஏழ்மை காரணமாகவும், இவரின் தந்தை இறந்த காரணத்தினாலும் பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டார்.
அரசியல் வாழ்க்கை:
அதன் பிறகு செய்தித்தாள் படித்து அதன் மூலம் அரசியல் வாழ்க்கை பற்றி ஓரளவு கற்று கொண்டு அரசியலிலும் நுழைந்தார்.
காமராஜர் 1954 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடம் என்ற அமைப்பில் எண்ணற்ற பள்ளிக் கூடங்களை நிறுவினார்.
கல்விக்கான பணி:

அதிலும் குறிப்பாக பள்ளிகளில் ஆரம்பத்தில் 16 குழந்தைகள் படித்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கையானது 48 லட்சம் என அதிகரித்தது. இது காமராஜருக்கு கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கான முதல் வெற்றியாக அமைந்தது.
பள்ளி படிக்கும் குழந்தைகளின் பசி நிலைமை கருதி மதிய உணவுத் திட்டம், மாணவர்களுக்கான சீருடை திட்டம் என இத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
கல்வி என்பது பொதுவான ஒன்றாக இருப்பதால் இது அனைவருக்கும் சம நிலையில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அதற்காக அயராது பாடுபட்டவர் காமராஜர்.
தமிழக முதல்வராக காமராஜர்:
1947-ம் ஆண்டு பிரிட்டிசுமிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காமராஜர் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். சுதந்திர போராட்டத்தில் அவரது தியாகம் மற்றும் பணியின் காரணமாக அவர் 1952– ஆம் ஆண்டு பாரளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1954-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
சிறப்பு பெயர்:
இவர் சரியான கல்வியினை கற்கவில்லை என்றாலும் இவரின் சாதனையினால் கர்ம வீரர், பெருந்தலைவர், படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி என்று எல்லாம் அழைத்தனர்.
கல்வி வளர்ச்சி நாள்:
இவ்வாறு இருக்கையில் காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அதன் பிறகு காமராஜரின் அயராது உழைப்பின் அம்சமாக 2006-ஆம் ஆண்டு முதல் ஜூலை 15-ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
கர்ம வீரர் இறந்த பிறகும் இவரின் பெருமை நிலைத்து நிற்கும் வகையில் 1976 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |














