அப்துல் கலாம் நினைவு நாள் | July 27 Special Day in India in Tamil..!
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவானது நாம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் நாம் நாடு வல்லரசு ஆக வேண்டியது இளைஞைர்களின் கையில் தான் இருக்கிறது என்று சொல்லி வாழ்ந்த ஒரு மிகப்பெரிய மனிதனை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ராமேஸ்வரத்தில் இந்திய நாட்டு மக்களுக்கு தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த ஒரு மகானாக வாழ்ந்தவர் தான் APJ அப்துல் கலாம் அவர்கள். அந்த வகையில் APJ அப்துல் கலாமின் நினைவுநாளாக ஜூலை மாதம் 27-ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகையால் அதனை பற்றிய மேலும் சில தகவலை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அப்துல் கலாம் நினைவு நாள்:
இராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15- ஆம் தேதி அன்று ஜைனுலாப்தீன் மற்றும் ஆயிஷாமாவிற்கும் மகனாக பிறந்தவர் தான் அப்துல் கலாம் அவர்கள்.
இவர் சொந்த ஊரிலேயே பள்ளி படிப்பினையும், புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படிப்பையும் மற்றும் சென்னையில் உள்ள எம்.ஜ.ரி கல்லூரியில் விண்வெளி பொறியியல் படிப்பினையும் படித்து முடித்தார்.
கலாம் அவர்களுக்கு இளம் வயதிலேயே விமானியாக வேண்டும் என்பதே ஒரு பெரும் கவனவாக இருந்து வந்தது. இந்த கனவினை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று ஏவுகணை தேர்வினை எழுதினார். ஆனால் அதில் இவர் 9-வது இடத்தினை பிடித்தும் கூட விமணியாகும் வாய்ப்பு கையை விட்டு சென்றது.
இவ்வாறு தேர்வில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட சிறிதும் நிற்காமல் தொடர்ந்து சாதனைகளை செய்து வந்தார். அதாவது Slv 3-யினை ஏவுவதில் முக்கிய பங்கு வகித்து அதற்கு பெருமை சேர்க்கும் வகையில் இவருக்கு 1981-ஆம் ஆண்டு பத்ம பூசன் விருது அளிக்கப்பட்டது.
அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ் |
அதற்கு பிறகும் எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வகையில் இஸ்ரோ, அக்னி பிரித்வி ஆகாஷ் ஏவுகணை திட்டம் மற்றும் அணு ஆயுத திட்டம் என பலவற்றிலும் இன்றியமையாத ஒரு இடத்தினை பிடித்து இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்த்தார்.
இத்தனை சாதனைகளுக்கு பின்பும் 2002-ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் நின்று அதில் வெற்றியினையும் அடைந்தார். இவர் குடியரசு தலைவராக பணியாற்றினாலும் கூட ஒரு எளிமையான வாழ்வினை வாழ்ந்து மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்தார். இதனால் மக்கள் அனைவராலும் இவர் மக்கள் ஜனாதிபதி என்றும், ஏவுகணை நாயகன் என்றும் அழைக்கப்பட்டார்.
A.P.J அப்துல் கலாம் அவர்கள் 2015- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27- ஆம் தேதி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் சொற்பொழிவு ஆற்றி கொண்டிருக்கும் பொழுதே இறந்துவிட்டார்.
மேலும் ஜூலை 27-ஆம் தேதி அன்று அப்துல் கலாம் அவர்களின் நினைவாக 8- வது நினைவு நாளாக இந்தியாவில் கொண்டாடப்பட்ட வருகிறது.
நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பற்றிய கட்டுரை
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |