கானல் நீர் என்றால் என்ன..? அது எவ்வாறு உருவாகிறது தெரியுமா..?

Kaanal Neer in Tamil

பொதுவாக வெயில் காலங்களில் நம்மில் பலரும் சாலையில் வாகனத்தில் செல்லும் பொழுது கானல் நீரை பார்த்து இருப்போம். ஆனால் கானல் நீர் என்றால் என்ன அது எவ்வாறு உருவாகின்றது என்று என்றாவது ஒரு நாள் சிந்தனை செய்து பார்த்து இருக்கிறீர்களா..? கானல் நீர் என்பது, நமது கண்கள் செய்யும் பிழையா, கற்பனை செய்யும் பிழையா என்றால் இரண்டுமே இல்லை என்று தான் கூறவேண்டும்.

கானல் நீருக்குக் காரணம் இயற்கை நடத்தும் இயற்பியல் விளையாட்டுதான். இந்தக் கானல் நீர் எப்படித் தோன்றுகிறது? என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து கானல் நீர் எவ்வாறு உருவாகுகிறது என்ற தகவலை அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> வானவில் தோன்ற காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

Kaanal Neer in Tamil:

பொதுவாக பாலைவனங்களில் மட்டும் தான் இந்த கானல் நீர் தோன்றுகிறது என்று நினைத்துக் கொண்டிருப்போம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை பொதுவாக சூரியனின் வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் எல்லாம் இந்த கானல் நீர் தோன்றும்.

உதாரணமாக வெயில் காலங்களில் மதிய வேளையில் தார் சாலையில் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் கூடத் தண்ணீர் பரவி ஓடுவது போன்ற தோற்றத்தைப் பார்க்க முடியும். சரி, இயற்கை எப்படி நம்மை இப்படி ஏமாற்றுகிறது தெரியுமா..?

கானல் நீர் தோன்ற காரணம்:

Kaanal Neer in Tamil

 தரையை ஒட்டியுள்ள பகுதியில் அழுத்தம் குறைவான காற்று அடுக்கும், இந்த அழுத்தம் குறைவான காற்று அடுக்கிற்கு மேற்பகுதியிலேயே அதிக அழுத்தமுள்ள காற்று அடுக்கும் உருவாகும். 

இதையும் படித்துப்பாருங்கள்=> உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?

அப்பொழுது மணல் தரையானது கண்ணாடி மாதிரியான தன்மையைப் பெற்று விடுகிறது. அதாவது அழுத்தம் குறைவான காற்றடுக்கின் மீது அதிக அழுத்தம் உள்ள காற்று அடுக்கு உருவாகும் போது தான் இந்தக் கானல் நீர் தெரிகிறது.

மேலும் நாம் தரையைப் பார்க்கிற கோணமும், கானல் நீர் தோற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக தார் சாலைகளில் கானல் நீர் காணப்படுவதற்கு வெப்பமும், நாம் பார்க்கும் கோணமும் தான் காரணம். இவ்வாறு தான் கானல் நீர் உருவாகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil