காணும் பொங்கல் பாடல்

Advertisement

காணும் பொங்கல் பாடல்

ஜனவரி மாதம் என்றாலே நினைவிற்கு வருவது பொங்கல். பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து விடுமுறை வரும். அதனால் போகிக்கு முதல் நாளே வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு கிளம்பி வருவார்கள். சொந்த ஊருக்கு வந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். 4 பொங்கலும் ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கிறது. அதில் போகி ஆனது பழையவற்றை நீக்கி விட்டு புதிதாக வாங்க வேண்டும் என்பதை குறிக்கிறது. அது போல நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். பெரும் பொங்கல் ஆனது ஒரு வருடமாக நெல் பயிரிட்டு அதனை அறுவடைசெய்வார்கள். இதற்கு இயற்கைக்கு நன்றி சொல்லும் விதத்தில் கொண்டாடப்படுகிறது. மாட்டு பொங்கல் ஆனது உழவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் ஆனது நமது உறவினர்களை காண்பதற்காக கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல் என்றால் என்ன.?

காணும் பொங்கல் பாடல்

காணும் பொங்கல் என்கிற பெயருக்கும் ஒரு வெளிப்படையான, எளிமையான விளக்கம் உள்ளது. அது காணுதல் ஆகும். ஆம்! பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கலின் போது, நாம் நமது உற்றார், உறவினர், நண்பர்களை “காணுதல்” மற்றும் பெரியவர்களை கண்டு அவர்களிடம் ஆசி பெறுவதும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

அதிலும் இந்த காணும் பொங்கல் ஆனது கன்னி பெண்களுக்கு உரியதாக இருக்கிறது. அன்றைய நாள் வாசலில் மஞ்சள் தண்ணீர் வைத்து தன்னுடைய மாமன்கள் மீது தண்ணீர் ஊற்றி விளையாடுவார்கள். மேலும் வீட்டில் உள்ள கன்னி பெண்கள் அன்றைய தினம் புடவை கட்டி, தலையில் பூ வைத்து ஆற்றுக்கு செல்வார்கள்.

மேலும் பலவகையான சாதங்கள் செய்து எடுத்து கொண்டு ஆற்றுக்கு செல்வார்கள். மார்கழி மாதத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து கோலம் போடுவார்கள். இந்த பிள்ளையாரை கரைக்கும் விதமாக ஆற்றுக்கு செல்வார்கள். அப்படி கரைக்கும் போது கும்மி பாட்டு பாடுவார்கள். அந்த பாடலை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

பொங்கலுக்கு பாடக்கூடிய பொங்கல் பாடல்கள்.!

‘புள்ளையாரே! புள்ளையாரே!

புடிச்சு வெச்ச புள்ளையாரே!

போன மாச மார்களில

பூப்போல வந்தீங்கிளே புள்ளையாரே!

இந்த மாசத் தையில தை! தைன்னு

ஆத்துத் தண்ணீல இறங்கறீரே புள்ளையாரே!

 

ஆத்தோடு குளத்தோடு போனாலும்

அளாம போய்வாங்க புள்ளையாரே!

பாட்டுப் பாடி, கும்மியடிச்ச எங்களை

மறந்துடாதீங்க புள்ளையாரே!

காத்துக் கெடக்கும் கன்னியருக்கு

கல்யாணம் நடக்கோணம் புள்ளையாரே!

காலமெலாம் கூட இருந்து

காப்பாத் தணும் புள்ளையாரே!

புள்ளையாரே! புள்ளையாரே!

பத்திரமா போய் வாரும் புள்ளையாரே!’

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement