கடன் உறுதி பத்திரம் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

What Is A Loan Guarantee Bond in Tamil

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி கடன் உறுதி பத்திரம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? விடை தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..?

கடன் உறுதி பத்திரம் என்றால் என்ன..?

 கடன் உறுதி பத்திரம் என்பது ஒரு வகையான கடன் பத்திரம் ஆகும். இந்த கடன் பத்திரம் பெரும்பாலும் பேச்சு வழக்கில் புரோநோட்டு ( Promissory note ) என்று சொல்லப்படுக்கிறது. இந்த கடன் உறுதி பத்திரமானது கடன் வாங்குபவர் கடன் கொடுப்பவருக்கு எழுதிக் கொடுக்கும் பத்திரமாகும். இது ஒரு பதிவு செய்யப்படாத பத்திரம் என்று சொல்லப்படுகிறது.  

இந்த பத்திரம் எழுதுவதற்கு 2 சாட்சிகள் உண்டு. இந்த கடன் உறுதி பத்திரம்  செல்லுபடியாகும் காலம் மூன்று வருடங்கள் ஆகும். 3 வருடங்களுக்கு மேல் தொடரவேண்டும் என்றால் புதிதாக கடன் உறுதி பத்திரம் எழுதி கொடுக்க வேண்டும். அல்லது இந்த கடன் உறுதி பத்திரத்தை வரவு வைக்கவேண்டும்.

கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..?

 

மறுமுறை எழுதி கொடுக்கும் பத்திரத்தில் நான் இந்த தேதியில் இவ்வளவு அசல் செலுத்தியுள்ளேன் என்று எழுதி கையொப்பம் இட வேண்டும். இதில் சாட்சிக்கு 2 நபர்கள் கையெழுத்து போட வேண்டும். சாட்சி கையெழுத்து போடுபவர் தனது தந்தை பெயர், ஊர் போன்ற விபரத்தையும் கொடுக்க வேண்டும்.

கடன் உறுதி பத்திரம் எழுதிக் கொடுப்பவர் 1 ரூபாய் வருவாய் முத்திரை (Revenue Stamp) ஒட்டி அதன் மேல் கையெழுத்து போட வேண்டும். அப்படி கையெழுத்து போடவில்லை என்றால் பத்திரம் செல்லாது.

மேலும், கடன் உறுதி பத்திரம் எழுதிக் கொடுத்து பணம் பெற்றவர் திருப்பி செலுத்தவில்லை என்றால் பணம் கொடுத்தவர் நீதிமன்றத்தில் இந்த பத்திரத்தை  தாக்கல் செய்தால் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு கிடைக்கும். அதனால் கடன் செலுத்தாதவர்களுடைய சொத்துக்களை நீதிமன்றம் பறிமுதல் செய்து கடன் கொடுத்தவருக்கான தொகையை வழங்கிவிடும்.

பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..?

கடன் பத்திரத்தின் வகைகள்:

  1. மாற்றத்தக்க கடன் பத்திரங்கள்
  2. மாற்ற முடியாத கடன் பத்திரங்கள்

மேலும் கடன் பத்திரம் எழுதுவது எப்ப்படுத்தி என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 👉👉👉 கடன் பத்திரம் எழுதுவது எப்படி..?

பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement