கனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம்..! Kanavil Kadavul Vanthal Palan..!
Kanavil Kadavul Vanthal Enna Palan/ கனவு பலன்கள் கடவுள்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் கனவில் கடவுள் வந்தால் என்னென்ன பலன் என்பதை பற்றித்தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். கனவு வருவது என்பது அனைவரின் வாழ்விலும் இயல்பான ஒன்றாகும். சிலர் மனதில் எப்போதும் நன்மை விஷயங்களை மட்டும் நினைத்து கொண்டிருக்கும் வகையில் அவர்களுக்கு கனவில் நன்மை மட்டுமே நிகழ்வதுண்டு. கெட்ட சகுனம் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளவர்களுக்கு கனவில் எப்போதும் கெட்ட விஷயங்கள் மட்டுமே நடப்பதற்கு வாய்ப்புள்ளது. நன்மை நடந்தாலும் சரி, தீமை நடந்தாலும் சரி எப்போதும் மனதில் இறைவனை மட்டுமே நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு கனவில் இறைவன் காட்சி தருகிறார். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்குமே ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது.
பொதுவாக நாம் காணும் கனவில் இரவு 1 மணி அளவில் வரும் கனவானது ஒரு வருடம் கழித்து நினைத்த கனவானது பலிக்கும் என்று கூறுவார்கள். இரவு 2 மணிக்கு கனவு வந்தால் அந்த கனவானது 3 மாதத்தில் பலிக்கும் என்று கூறுவார்கள். அதே அதிகாலையில் காணும் கனவிற்கு பலன் உடனே கிடைக்கும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இப்போது கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் இருக்கிறது என்பதை பற்றி விரிவாக படித்தறியலாம்..!
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்..! Kulanthai Kanavil Vanthal Enna Artham..! |
முருகன் கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் முருகனை கண்டால் மனதில் நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்க போகிறது என்று அர்த்தமாகும்.
சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன அர்த்தம்:
சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன நடக்கும்: சிவலிங்கத்தை கனவில் கண்டால் தினமும் தியான பழக்கத்தை கொண்டுவர வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
மேலும் முழுமையான விவரங்களை தெரிஞ்சிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்? |
பிள்ளையார் கனவில் வந்தால் என்ன பலன்:
பிள்ளையார் கனவில் வந்தால் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும் என்பது அர்த்தமாகும்.
அய்யனார் கனவில் வந்தால் என்ன பலன்/ Ayanar Swamy Kanavil Vantha Ena Palan:
கனவில் அய்யனாரை கண்டால் மனதில் உள்ள பயம் நீங்கி மன தைரியம் அதிகரிக்க செய்யும்.
விஷ்ணு பகவான் கனவில் வந்தால் என்ன பலன்:
விஸ்ணு பகவான் நம் கனவில் வந்தால் செல்வந்தர்களாக போகிறோம் என்பது அர்த்தமாகும்.
விஷ்ணு கருடன் மேல் வருவது போல் கனவு வந்தால்:
விஷ்ணு கருடன் மீது வருவது போன்று கனவு வந்தால் சிக்கலான வழக்கில் வெற்றி கிடைக்க போகிறது என்று அர்த்தமாகும்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..! |
இறைவன் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கனவில் இறைவன் உங்களிடம் பேசுவது போன்று வந்தால் இந்த ஜென்மம் முழுவதும் புண்ணியம் அடைந்ததாக இருக்கும்.
காளிதேவி கனவில் வந்தால் என்ன பலன்:
காளிதேவி உங்கள் கனவில் தோன்றினால் தேவையில்லாத பிரச்சனை, வீண் சண்டை சச்சரவு தேடி வரப்போகிறது என்று அர்த்தமாகும்.
கனவில் கடவுளின் விக்ரகம் வந்தால் என்ன பலன்:
ஏதேனும் ஒரு கடவுளின் விக்ரகம் கனவில் வந்தால் கனவில் தோன்றிய தெய்வத்தை குடும்பத்துடன் சென்று வழிபடுதல் வேண்டும்.
நவகிரகம் கனவில் வந்தால் என்ன பலன்:
நவகிரகம் கனவில் வந்தால் 9 வாரம் தொடர்ந்து அந்த கோவிலுக்கு சென்று 9 முறை கோவிலை சுற்றி வலம் வர வேண்டும். இதனால் நன்மை பெருகும்.
அம்பாள் கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் அம்பாள் தெய்வத்தினை கண்டால் வீட்டில் ஏதோ சுப நிகழ்ச்சி நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
பெருமாள் கனவில் வந்தால் என்ன பலன்:
பெருமாள் கனவில் வந்தால் என்ன பலன்: கனவில் பெருமாள் தோன்றினால் தொழிலில் இருந்து வந்த இடைவிடாத பிரச்சனைகள் அனைத்தும் அகன்றுவிடும்.
குலதெய்வம் கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் அவர்களுடைய குலதெய்வம் வந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். கனவில் குலதெய்வம் வந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகக்கூடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
எந்த தெய்வ சிலை கனவில் வந்தாலும் நல்ல சகுனம் என்றே ஆன்மீக சாஸ்திரம் கூறுகிறது.
கனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்..! Marriage Kanavu Palangal in Tamil..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |