வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கடிதம் எழுதும் முறை

Updated On: April 4, 2025 4:42 PM
Follow Us:
kaditham eluthum murai
---Advertisement---
Advertisement

Kaditham Eluthum Murai

பள்ளியில் படிக்கும் பொது விடுப்பு விண்ணப்பம் எழுதிருப்போம், அதன் பிறகு கல்லூரி படிக்கும் போது எழுதிருப்போம். பொதுவாக கடிதங்களில் பல வகைகள் உள்ளது. விடுப்பு விண்ணப்பம், போலீஸ் புகார் கடிதம், ராஜினாமா கடிதம் என பலவகை உள்ளது. ஒவ்வொரு கடிதத்திற்கு ஒவ்வொரு Format உள்ளது. அதனை அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த format-யை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் போனில் தான் டைப் செய்து தெரிந்து கொள்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கடிதம் எழுதும் முறையை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம்.

Kaditham Eluthum Murai in Tamil:

அனுப்புநர்:

தங்கள் பெயர்,
தங்கள் முகவரி.

பெறுநர்:

யாருக்கு கடிதம் எழுதுகிறீர்களோ அவர்களின் முகவரியை பெறுநர் பகுதியில் எழுத வேண்டும்.

பொருள்: எந்த காரணத்திற்காக எழுதுகிறீர்களோ அவனை சுருக்கமாக தலைப்பு வடிவில் எழுத வேண்டும்.

மதிப்புற்குரிய ஐயா,

வணக்கம் என்று ஆரம்பித்து நீங்கள் எந்த விஷயத்திற்காக கடிதம் எழுதுகிறீர்களோ அதனை விரிவாகவும், முழுவதுமாக எழுத வேண்டும். இதனை சின்ன எடுத்துக்காட்டுடன் எப்படி எழுத வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து அறிந்து கிள்ளுங்கள்.

மின்சார வசதி வேண்டி விண்ணப்பம்.

அனுப்புநர்:

தங்கள் பெயர்,
தங்கள் முகவரி.

பெறுநர்:

மின்சார துறை அதிகாரி பெயர் அல்லது வகிக்கும் பதவி,
உங்கள் ஊரின் மின்சார துறையின் முகவரியை எழுதிக்கொள்ளுங்கள்.

பொருள்: தெரு விளக்கு அமைத்து தர வேண்டி விண்ணப்பம்

மதிப்புற்குரிய ஐயா,

வணக்கம், எங்கள் தெருவில் வசிக்கும் மக்கள் தெரு விளக்கு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றால் கூட இருட்டில் செல்லும் நிலை உள்ளது. மேலும் இங்கு அடிக்கடி திருட்டுகள் நடைபெறுகின்றன. அதுவும் சாலையில் வழிபறிகள் மிகுதியாக உள்ளது. தெரு விளக்குகள் இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

மேலும் இரவு நேரத்தில் பணிக்கு சென்று வீடு திரும்புவர்கள் நடந்து வருபவர்கள் மேடு பள்ளம் தெரியாமல் அவதிப்படுகின்றன. அதனால் தாங்கள் தயவுசெய்து எங்கள் ஊருக்கு ஒரு முறை வந்து பார்வையிட்டு தெரு விளக்கு வசதியை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
XXX

(உறைமேல் உள்ள முகவரி)
பெறுநர்:
நகராட்சித் ஆணையர்,
நகராட்சி அலுவலகம்,
அதன் ஊர்.

வேலைவாய்ப்பு வேண்டி விண்ணப்பம் கடிதம்:

அனுப்புநர்

பெயர்

முகவரி

பெறுநர்:

எந்த துறைக்கு வேலை வேண்டி எழுதுகிறீர்களோ அதன் முகவரி

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: எந்த பணிக்காக விண்ணப்பிக்கிறீர்களோ அதனை பற்றி குறிப்பிட வேண்டும்.

எடுத்துக்காட்டாக,

தங்கள் கல்லூரியில் உதவி பேராசியராக பணியிடம் காலியாக உள்ளதை அறிந்தேன். நான் கடந்த 5 ஆண்டுகளாக உதவி பேராசியராக பணியாற்றி வந்தேன்.  மாணவர்களுக்கு கல்வியை கற்று கொடுப்பதில் ஆரவமாகவும், அர்ப்பணிப்பாகவும் செய்வேன். தங்களின் கல்லூரியில் உதவி பேராசியராக பணியாற்றும் பணியை வழங்கினால் நேர்மையுடனும், உணமையுடனும் பணியாற்றுவேன். மாணவர்களின் உயர்வுக்கும், கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன். எனவே தங்களின் கல்லூரியில் தமிழ் உதவி பேராசியராக பணியாற்ற வாய்ப்பு தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

பெயர்

இடம் :————

நாள்:———–

 

தமிழ்நாடு மின்சார வாரியம் புகார் எண்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now