வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கலைஞர் கருணாநிதி செய்த 98 சாதனைகள்..!

Updated On: June 1, 2024 4:18 PM
Follow Us:
Kalaignar Sadhanaigal in Tamil
---Advertisement---
Advertisement

Kalaignar Sadhanaigal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இந்த பதிவின் வாயிலாக நாம் இன்று கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்த 98 சாதனைகளை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக பார்க்க இருக்கின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே கலைஞர் என்றால் யார் என்று தெரியும் அல்லவா..! அதாவது நம் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், அரசியல் ஆளுமையுமானவர் தான் கலைஞர் கருணாநிதி அவர்கள். அவரின் பிறந்தநாள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆகவே அவரின் பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக இந்த பதிவின் வாயிலாக கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கலைஞர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2024

கலைஞர் கருணாநிதி சாதனைகள்:

நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருக்குவளை பகுதியில் ஜூன் 3, 1924 ஆம் ஆண்டு பிறந்த முத்துவேல் கருணாநிதி அவர்கள் பள்ளிப்பருவத்தில் இருந்தே அரசியல் ஆர்வம் மிக்க மாணவராய் வளர்ந்தவர். கலைஞர் செய்த சாதனைகளை கூறவேண்டும் என்றால், கூறிக்கொண்டே போகலாம். அதில் இப்போது நாம் 98 சதைகளை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.

மிகச்சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஒருவர் முதலமைச்சர் ஆகமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் தான் கலைஞர்.

மாநிலங்களுக்கும் திட்டக்குழு வேண்டும் என்ற தொலைநோக்கோடு, மாநிலத்திட்டக் குழுவை முதன் முதலில் உருவாக்கியவர்.

இந்தியாவில் முதன்முதலாக ‘மாநில சுயாட்சி’ குழுவை, தமிழ்நாடு அரசு மருத்துவர் ராஜமன்னார் தலைமையில் உருவாக்கியவர், கலைஞர்.

சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்களும் தேசியக்கொடியை ஏற்ற வழிவகை செய்தவர், கலைஞர்.

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தை உருவாக்கி, பேருந்துகளை நாட்டுடைமையாக்கியவர், கலைஞர்.

தமிழ்நாட்டின் அனைத்துக் கிராமங்களும் மின்சாரத் தன்னிறைவு பெற காரணமானவர், கலைஞர்.

தமிழ்நாட்டின் சிறிய கிராமங்களையும் இணைக்கும் வகையில், சாலைத் திட்டங்களை உருவாக்கியவர், கலைஞர்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, ஏழை மக்களை அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு நகர்த்தியவர், கலைஞர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கியவர்,கலைஞர்.

‘கண்ணொளி’ திட்டத்தின் மூலம், இலவச கண் சிகிச்சை முகாம்களை ஆரம்பித்து வைத்தவர், கலைஞர்.

சமூகத்தில் முற்றிலும் ஒதுக்குதலுக்கு ஆளாகியிருக்கும் பிச்சைககாரர்களுக்கென்று மறுவாழ்வு மையம் தொடங்கியவர், கலைஞர்.

மிகப்பெரிய மனித உரிமைமீறல் இழிவான, கையால் இழுக்கும் ரிக்‌ஷாவை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷாவை அறிமுகப்படுத்தியவர், கலைஞர்.

ஒடுக்கப்பட்டோருக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு

சரியான வாடகை உள்ளிட்ட அம்சங்களை கொண்ட குடியிருப்பு சட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

இந்தியாவிலேயே முதன்முதலாக காவல்துறை ஆணையத்தை அமைத்தவர், கலைஞர்.

தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண்களை பணியமர்த்தியவர், கலைஞர்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென தனியாக துறைகளை அமைத்தவர், கலைஞர்.

பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை 31% ஆகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 18% ஆகவும் உயர்த்தியவர், கலைஞர்.

உழைப்பாளர்கள் தினமான மே 1ம் தேதியை, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாய் அறிவித்தவர், கலைஞர்.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபி திருநாளை, விடுமுறை தினமாய் அறிவித்தவர், கலைஞர்.

தமிழ்நாட்டில் முதல் விவசாய கல்லூரியாக, கோவை விவசாய கல்லூரியை உருவாக்கியவர், கலைஞர்.

அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க, ‘அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம்’ தந்தவர், கலைஞர்.

மீனவர்களின் நலன் காக்க, இலவச வீடு வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

கோயில்களில் குழந்தைகளுக்கான ‘கருணை இல்லம்’ அமைத்தவர், கலைஞர்.

சேலம் இரும்பு தொழிற்சாலையை அமைத்தவர், கலைஞர்.

நில விற்பனை வரையறை சட்டம் கொண்டுவந்தவர், கலைஞர்.

நெய்வேலியில், இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தியை கொண்டுவந்தவர், கலைஞர்.

தூத்துக்குடிக்கு, பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலையை கொண்டுவந்தவர், கலைஞர்.

SIDCO உருவாக்கியவர், கலைஞர்.

SIPCOT உருவாக்கியவர், கலைஞர்.

தமிழ் இஸ்லாமியர்களைப் போல, உருது பேசும் இஸ்லாமியர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர், கலைஞர்.

பயனற்ற நிலத்தின் மீதான வரியை நீக்கும் திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

பூம்புகார் கப்பல் நிறுவனத்தை உருவாக்கியவர், கலைஞர்.

கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தவர், கலைஞர்.

மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், வன்னியர், சீர் மரபினரை சேர்த்தவர், கலைஞர்.

மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர், கலைஞர்.

தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தவர், கலைஞர்.

பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தவர், கலைஞர்.

அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியவர், கலைஞர்.

வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி தந்தவர், கலைஞர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தவர், கலைஞர்.

சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று சட்டம் கொண்டுவந்தவர், கலைஞர்.

அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு தந்தவர், கலைஞர்.

ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தை அமைத்தவர், கலைஞர்.

ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்தை தந்தவர், கலைஞர்.

விதவைப் பெண்கள் மறுமண நிதி உதவி திட்டத்தை தந்தவர், கலைஞர்.

நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்தவர், கலைஞர்.

நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கியவர், கலைஞர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்தவர், கலைஞர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை நிறுவியவர், கலைஞர்.

‘நீராருங் கடலுடுத்த…’ பாடலை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக தேர்ந்தெடுத்தவர், கலைஞர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை நிறுவியர், கலைஞர்.

டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு, எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியவர், கலைஞர்.

காவிரி நடுவர் மன்றம் அமைக்க முதன்முதலில் குரல் கொடுத்தவர், கலைஞர்.

தமிழ்நாட்டில், கூட்டுறவு தேர்தல் முறையை கொண்டுவந்தவர், கலைஞர்.

உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கியவர், கலைஞர்.

பராசக்தி மூலம் தமிழ்த்திரையில் வசனப்புரட்சியை ஏற்படுத்தியவர், கலைஞர்.

மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று மாற்றியவர், கலைஞர்.

ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியவர், கலைஞர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கியர், கலைஞர்.

தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கையை உருவாக்கியவர், கலைஞர்.

விதவைப் பெண்கள் தொழில் தொடங்க உதவிகளை வழங்கியவர், கலைஞர்.

கான்கிரீட் சாலைகள் அமைக்கும் நடைமுறையை கொண்டுவந்தவர், கலைஞர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர மருத்துவ சேவையை தொடங்கி வைத்தவர், கலைஞர்.

தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவிகளுக்கு 15% இடஒதுக்கீடு தந்தவர், கலைஞர்.

சாதி ஒழிப்பு புரட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படும், சமத்துவபுரங்களை உருவாக்கியவர், கலைஞர்.

கிராமங்களில் மினி-பேருந்து சேவையை கொண்டுவந்தவர், கலைஞர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக அம்பேத்கர் பெயரில் சட்டக்கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தை உருவாக்கியர், கலைஞர்.

பெரியார் பல்கலைக்கழகத்தை நிறுவியர், கலைஞர்.

உலகத் தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகத்தை தந்தவர், கலைஞர்.

தமிழுக்கு செம்மொழி உரிமையை பெற்றுத் தந்தவர், கலைஞர்.

உருது அகாடமியை உருவாக்கியவர், கலைஞர்.

சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சியடைய தனி அமைப்பை ஏற்படுத்தியவர், கலைஞர்.

உழவர் சந்தை திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

‘வருமுன் காப்போம்’ திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவக் காப்பீடு திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

கால்நடைகள் பாதுகாப்பு திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

திருக்குறளை மக்கள்மயமாக்கியவர் கலைஞர்.

கன்னியாகுமரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்தவர், கலைஞர்.

சென்னையில், டைடல் பார்க்கை உருவாக்கியர், கலைஞர்.

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை உருவாக்கியவர், கலைஞர்.

மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவித்தொகை வழங்கியவர், கலைஞர்.

ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாக பெயர் பெற்றிருக்கும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை உருவாக்கியவர், கலைஞர்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

விவசாயக்கூலி வேலை செய்வோருக்கு நல வாரியம் அமைத்தவர், கலைஞர்.

பொதுக்கூலி வேலை செய்வோருக்கு நல வாரியம் அமைத்தவர், கலைஞர்.

தமிழ்நிலத்தின் அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியவர், கலைஞர்.

தமிழ்நாடெங்கும் 42 அணைகளை கட்டியவர், கலைஞர்.

மாணவர்களின் ஊட்டச்சத்துக்காக, சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்த்தவர், கலைஞர்.

21 மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை கட்டியவர், கலைஞர்.

மதுரை நீதிமன்றத்தை கட்டியவர், கலைஞர்.

இலவச பஸ் பாஸ் திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் கொண்டுவந்தவர், கலைஞர்.

நமக்கு நாமே திட்டம் கொண்டுவந்தவர், கலைஞர்.

சென்னை விமான நிலைய முனையங்களுக்கு, அண்ணா மற்றும் காமராஜர் பெயரை சூட்டியவர், கலைஞர்.

தகவல் பாகுபாட்டை உடைப்பதற்காக, இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தை கொண்டுவந்தவர், கலைஞர்.

கலைஞர் கருணாநிதி செய்த சாதனைகள் பற்றிய கட்டுரை

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now