காலமுறை ஊதியம் | Kalamurai Oothiyam Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காலமுறை ஊதியம் என்றால் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். நாம் பெரும்பாலும் மாத சம்பளம் வாங்கும் நபராகத்தான் இருப்போம். ஆனால் நமது சம்பளம் எந்த முறைப்படி வழங்கப்படுகின்றது என்பது நமக்கு தெரியாது. நமது சம்பள தொகை மற்றும் பிடித்தங்களை தெரிந்து வைத்திருப்போம். சம்பளம் பெரும் நாம் அதிகம் கால முறை ஊதியம், தொகுப்பு ஊதியம் என்ற வார்த்தைகளை கேட்டு இருப்போம். ஆனால் அதற்கான அர்த்தம் என்ன அதனை எங்கு பயன்படுத்த படுகிறது.
காலமுறை ஊதியத்திற்கும் தொகுப்பு ஊதியத்திற்கும் வேறுபாடு உண்டா? கால ஊதியம் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் உண்டா என்பது பற்றி நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அந்தவகையில் இன்று காலமுறை ஊதியம் என்றால் என்ன ? அது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்பதனை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.
காலமுறை ஊதியம் | Scale of Pay:
காலமுறை ஊதியம் என்பதை Scale of Pay என்று அழைக்கப்படுகிறது.
காலமுறை ஊதியம் என்றால் ஒரு நபர் வேலையில் சேரும்போது பெறும் குறைந்த பட்ச ஊதியமும், அவர் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது கிடைக்கும் அதிகப்பட்ச ஊதியமும் மற்றும் அவரின் வருடாந்திர ஊதிய உயர்வு ஆகியற்றை குறிப்பது ஆகும்.
Kalamurai Uthiyam Endral Enna in Tamil:
கால முறை ஊதியம் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பொருந்தாது.
அதாவது ஒரு நபர் பணியில் சேரும்போது பெரும் குறைந்த பட்ச தொகை (சம்பளம்), பஞ்சப்படி, அகவிலைப்படி, மற்றும் வருடத்திர சம்பள உயர்வு, அத்துடன் அவர் ஒய்வு பெறும்போது பெரும் அதிகபட்ச தொகை ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட அழகின் கீழ் குறிப்பிட பயன்படுத்துவது காலமுறை ஊதியம்.
எடுத்துக்காட்டாக.
ராமன் பணியில் சேரும் போது 10,000 சம்பளம் பெறுகின்றான். வருடாந்திர உயர்வு அவருக்கு ரூபாய் 500 வழங்கப்படுகிறது. அப்படி என்றால் 20 வருடங்களுக்கு பிறகு அதாவது ஒய்வு பெரும் சமயத்தில் அவர் வாங்கும் சம்பளம் ரூபாய் 22,000 ஆகும்.
இதனை Scale of Pay முறையில் எழுதுவது என்றால் 10,000 – 500 – 22,000 என குறிப்பிடப்படும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |