காலி மனை பட்டா வாங்குவது எப்படி தெரியுமா..?

Advertisement

Kali Manai Patta Vanguvathu Eppadi

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக காலி மனை பட்டா வாங்குவது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக அனைத்து வீடுகளிலும் இருக்க கூடிய பிரச்சனை என்றால், அது சொத்து பிரச்சனை தான். என்ன தான் அண்ணன் தம்பிகள் சிறுவயதில் இருந்து ஒற்றுமையாக இருந்தாலும் சொத்து பிரச்சனை என்று வந்தால் நீ யாரோ நான் யாரோ தான். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது தான் சொத்து. அன்றிலிருந்து இன்று வரை இந்த பிரச்சனை மட்டும் ஒரு முடிவுக்கு வருவதே இல்லை. அதுபோல நாமும் நம் பதிவின் வாயிலாக சொத்து, நிலம், பட்டா போன்ற பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக காலி மனை பட்டா வாங்குவது எப்படி (Kali Manai Patta Vanguvathu Eppadi) என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

காலி மனை வரி என்றால் என்ன

காலி மனை என்றால் என்ன..? 

பொதுவாக நம் அனைவருக்குமே சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நிலம் வாங்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அதில் பல விஷயங்களை நாம் சரிப்பார்ப்பது மிகவும் அவசியமானதா இருக்கிறது. நிலம் வாங்குவதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க முடியாது.

சரி நாம் ஒரு இடத்தில் ஏதோ ஒரு கடை, விவசாயம் அல்லது வீடு காட்டுகிறோம் இதுபோல ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று விரும்பி புதிதாக ஒரு இடத்தினை வாங்குவோம்.

ஆனால் அப்படி நாம் வாங்கிய இடத்தில் எதையும் செய்யலாம் அப்படியே காலியாக வைத்து இருந்தால் அதை தான் காலி மனை என்று கூறுகிறார்கள்.

சரி வாங்க நண்பர்களே காலி மனைக்கு பட்டா வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

வீட்டில் இருந்த படியே பட்டா வாங்குவது எப்படி

காலி மனை பட்டா வாங்குவது எப்படி..?

இப்போது நீங்கள் உங்கள் ஊரில் இருக்கும் ஏதோ ஒரு காலி மனையை வாங்க நினைக்கிறீர்கள் என்றால், முதலில் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

  • முதலில் நீங்கள் வாங்க போகும் இடத்திற்கான 30 வருட வில்லங்க சான்றிதழை சரி பார்க்க வேண்டும்.
  • அடுத்து, நீங்கள் வாங்க நினைக்கும் காலி மனை வாரிசு பெயரில் இருக்கிறதா அல்லது வேறு யார் பெயரில் இருக்கிறது என்று சரி பார்க்க வேண்டும்.
  • அதுமட்டுமில்லாமல், குறிப்பாக காலி மனை வாங்கும் போது மூல பாத்திரம் ஒர்ஜினலாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
  • கடைசியாக நீங்கள் வாங்கும் காலி மனைக்கு CMDA Approval இருக்கிறதா என்று பார்ப்பது மிகவும் அவசியமாகும்.

இவை அனைத்தையும் சரி பார்த்து விட்டு, நீங்கள் கண்டிப்பாக நிலத்தை வாங்குவீர்கள் என்றால், உங்கள் ஊரில் இருக்கும் அலுவலகத்தில் உள்ள கிராம நிர்வாகியை வைத்து நிலம் வாங்குவது சிறந்தது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement