கலியுகத்தின் உண்மைகள். அந்த காலத்திலேயே கிருஷ்ணன் கூறியிருக்கிறார் ?

kaliyugam eppadi irukkum

கலியுகத்தில் என்ன நடக்கும்

நண்பர்களே வணக்கம் இன்றைய தமிழ் பதிவில் கலியுகம் எப்படி இருக்கும். என்று அன்றே கிருஷ்ண பகவான் கணித்து கூறுகிறார். கலியுகம் என்பது நாம் வாழும் காலம் தான். இந்த காலத்தின் கலியுகம் முடிய இன்னும் எவ்வளவு காலம் உள்ளது என்பது எண்ணினால் நாம் அனைவரும் உயிரோடு இருப்போமா என்பதை விட நம்முடைய பேரன் பேத்தி கூட உயிரோடு இருக்கமாட்டார்கள். அது தான் உண்மை என்றால் யுகங்கள் மொத்தம் நான்கு வகைப்படும் அதில் ஒரு யுகத்திற்கு எவ்வளவு காலம் என்பதை கணித்துக்கூட சொல்ல முடியாது அந்த அளவிற்கு ஒரு யுகம் பெரிதாக இருக்கும். ஆனால் அதனை அன்று இருந்த கிருஷ்ண பகவான் அழகாக கணித்து கூறியிருக்கிறார். வாங்க அதனை படித்து தெரிந்துகொள்வோம்..!

எத்தனை யுகங்கள் உள்ளன?

புராணங்களின் படி யுகங்கள் நான்கு வகைப்படும். கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம்.

துவாபர யுகத்தில் வாழ்ந்த பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது கலியுகத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டிருக்கு அப்போது கிருஷ்ணரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது கிருஷ்ணரிடம் அந்த ஐவரும் கலியுகத்தில் மனிதன் எப்படி இருப்பான் என்று  கேட்டார்கள்.

அப்போது கிருஷ்ணர் அதனை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் நீங்கள் ஐவரும் இந்த காட்டில் தங்கி அங்கு என்னெல்லாம் பார்க்கிறீர்களோ அது அனைத்தையும் என்னிடம் வந்து  கூறுங்கள் என்று சொல்கிறார் கிருஷ்ணர்.

உடனே அங்கு சென்று பார்த்துவிட்டு வந்து ஒவ்வொருவராக கூறுகிறார்கள்.

அப்போது நான் காட்டில் இரண்டு தும்பிக்கை கொண்ட யானையை பார்த்தேன் என்கிறார் ஒருவர் அதற்கு கிருஷ்ணன் சொல்கிறார் இதேபோல் தான் கலியுகத்தில் இரண்டு வகையாக இருப்பார்கள்.

ராஜா மந்திரி என்கிற இருவரும் அரசியல் வாதியாக இருப்பார்கள். அப்போது நன்றாக பேசி மக்களிடையே ஓட்டுகள் வாங்குவார்கள் அதன் பின் அனைத்தையும் மறந்து விடுவார்கள்.

இன்னொருவர் வந்து நான் அங்கு பசு மாடு ஒன்று குட்டியை இன்று எடுத்தது அந்த குட்டியை அதுவே சுத்தம் செய்கிறது அப்போது அந்த குட்டி சுத்தம் ஆனாலும் திரும்பவும் நாக்கால் சுத்தம் செய்வதால் அந்த குட்டியின் மீது இரத்தம் வருகிறது. என்று சொல்கிறார் அதுமட்டுமில்லாமல் எப்படி ஒரு தாயால் பிள்ளைக்கு கெடுதல் நினைக்க முடியும் என்கிறார்கள். இதை போல் தான் கலியுகத்திலும் நடக்கும். பெற்றோர்களே தவறுக்கு துணை செல்வார்கள்.

இந்த கலியுகத்தில் அறிஞர்கள் இருப்பார்கள் அதேபோல் ஆசிரமம் நடத்தும் சாமியார்களுக்கு இருப்பார்கள். ஆனால் அவர்களால் மற்றவர்களுக்கு எந்த ஒரு விஷயமும் நடக்காது என்றும் கஷ்டங்கள் மட்டுமே நடக்கும் என்றுகிறார் கிருஷ்ணர்.

மாற்றாருவர் ஒருவர் வந்து நாம் பெரிய மலையிலிருந்து ஒரு பாறாங்கல் உருண்டு வருகிறது. அது வரும் போது அங்குள்ள பெரிய மரங்கள் விழுந்துவிட்டது கடைசியாக ஒரு சின்ன செடியின் மீது பட்டு அந்த கல் நின்று விடும். இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார் அதற்கு அந்த கலியுகத்தில் வாழ்பவர்கள் பக்தியின் பலவீனம் ஆகும். சான்றோர்கள் சொல்லும் எதையும் கேட்க மாட்டார்கள். நாளுக்கு நாள் ஒழுக்கமின்மையிலிருந்து விடுபட்டு தவறான வழிகளை பின்பற்றுவார்கள். இப்படி பட்டவனை இறைவனின் மீது வைக்கும் ஒரு பக்தி மட்டுமே அவனை நிறுத்தி விடும். என்கிறார். அதனை தான் அந்த பாறை குறிக்கிறது என்கிறார்கள்.

கடைசியாக உள்ள பாண்டவர் நான் நிறைய கிணற்றை பார்த்தேன் அந்த கிணற்றின் ஒரு கிணற்றில் மற்றும் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருக்கிறது மற்ற கிணற்றில் அனைத்திலும் தண்ணீர் நிறைந்து உள்ளது இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார் கிருஷ்ணரிடம்.

இதற்கு அர்த்தம் கலியுகத்தில் உள்ளவர்கள் அதிகளவு பணக்காரனாக இருப்பார்கள் ஆனால் அதில் கொஞ்சம் பேர்தான்  ஏழையாக இருப்பார்கள். அதனை கண்டு பணக்காரனுக்கு கொஞ்சம் கூட அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூடதோன்றாது, அதேபோல் பணக்காரன் மட்டும் வளர்த்துக்கொண்டு செல்வார்கள் ஆனால் ஏழை அந்த இடத்தில் தான் இருப்பார்கள். இது தான் நீ பார்த்தவற்றிற்கு அர்த்தம்.

வைகுண்ட ஏகாதசி தோன்றிய வரலாறு உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil