கல்லை கண்டால் நாயை காணோம் | kallai Kandal Nayai Kanom
நம் முன்னோர்கள் அர்த்தமுள்ள பல பழமொழிகளை கூறி வந்தார்கள். ஆனால் அவர்கள் கூறிய ஒவ்வொரு பழமொழியுமே காலப்போக்கில் வேறு அர்த்தத்தில் வந்து நிற்கின்றன. அவர்கள் ஒரு விதத்தில் கூறிய பழமொழியை நாம் வேறொரு விதத்தில் புரிந்துக்கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் முற்காலத்தில் கூறிய பழமொழிகளில் ஒன்றான “நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” பழமொழிக்கான உண்மையான அர்த்தம் என்னவென்று இப்பதிவில் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
“உலை வாயை மூடலாம் ஆனால் ஊர் வாயை மூட முடியாது” இந்த பழமொழிக்கான அர்த்தம் என்ன..? |
கல்லை கண்டால் நாயை காணோம் பழமொழி விளக்கம் | kalla kanda naya kanum in tamil:
இந்த பழமொழியை நாம் பேச்சு வாக்கில் சொல்லியிருப்போம். இது வேடிக்கைக்காக சொல்ல பட்ட பழமொழி. இந்த பழமொழிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் சொல்வார்கள்.
பொதுவாக சிலருக்கு நாயை கண்டால் உடனே கல்லை எடுக்கும் பழக்கம் இருக்கும். ஏனென்றால் நாய் நம்மை கடித்துவிடுமோ என்று பயந்து நம்மை அறியாமலே உடனே கல்லை எடுத்து நாயை விரட்டுவார்கள்.
களவும் கற்று மற என்ற பழமொழிக்கான உண்மை அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?
இதனைத்தான் சிலர் நாயை பார்க்கும்போது கல் கிடைக்காது, கல் கிடைத்தால் நாய் இருக்காது என்று கூறுவார்கள். இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தம் என்று சொல்வார்கள். ஆனால் இது அதற்கான அர்த்தம் கிடையாது.
மற்ற சிலர் நாயை கல்லால் அடித்து அது ஒற்றை காலிலே நொண்டி கொண்டு ஓடுவதை பார்த்து சிரிப்பதற்காக இப்படி செய்வார்கள். இப்படி நாய்க்கும் கல்லுக்கும் தொடர்பு இருக்கோ இல்லையோ ஆனால் மனிதனுக்கும் கல்லுக்கும் தொடர்பு இருக்கிறது.
“நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” பழமொழிக்கு உள்ளார்ந்த அர்த்தம் ஒன்று உள்ளது.ஒரு மனிதர் தன் தோட்டத்தை திருடனிடமிருந்து பாதுக்காக்க கல்லால் நாய் சிலையை செதுக்கி வைத்தார். அது மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நாய் சிலையை உண்மையாகவே நாய் என்று நினைத்து எந்த கள்வனும் தோட்டத்திற்கு வரவில்லை. ஆனால் தினமும் இந்த வழியே வந்து கொண்டிருந்த ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது, என்னடா இது நானும் தினமும் பார்த்துட்டே இருக்க இந்த நாய் கொஞ்சம் கூட நகராமல் ஒரே இடத்திலேயை இருக்கிறது. என்று கூறினார்.” போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை” என்ற பழமொழியின் அர்த்தம் தெரியுமா..?
பிறகு அவர் அதற்கு பக்கத்தில் சென்று அதை தொட்டு பார்த்தாராம். அப்போதுதான் தெரிந்ததாம் அது கல்லால் செய்யப்பட்ட நாய் என்று..! கல் என்று தெரியாததற்கு முன்பு அது நாயாகவே தெரிந்தது. ஆனால் கல் என்று தெரிந்த பிறகு அது நாய் என்ற எண்ணம் முற்றிலும் மறைந்து போயிற்று. இது முழுக்கல்லில் செதுக்கப்ட்டுள்ளதா..? கடப்பா கல்லா.? இல்ல கருங்கல்லா..? என்று கல்லை பற்றிய சிந்தனையாகவே இருந்தது. அதாவது நாயென்று பார்த்தபோது அது கல்லாக தெரியவில்லை..! கல்லென்று பார்த்தபோது அது நாயாக தெரியவில்லை என்பது தான் அர்த்தம். இதை உணர்த்தித்தான் “நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்ற பழமொழி வந்திருக்கிறது என்று கூறுகின்றனர்.இது போன்று பல பழமொழிகள் பேச்சுவழக்கில் மருவி வேறொரு அர்த்தத்துடன் வருகின்றன.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |