வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கல்வி திருக்குறள் பொருள் | Kalvi Thirukkural in Tamil..!

Updated On: October 21, 2025 6:56 PM
Follow Us:
kalvi thirukkural in tamil
---Advertisement---
Advertisement

கல்வி திருக்குறள் பொருள் | Kalvi Thirukkural in Tamil..!

தமிழில் உள்ள எண்ணற்ற நூல்களில் ஒரு சிறப்பான இடத்தினை பெற்ற நூல் என்றால் அது திருக்குறள் தான். இந்த திருக்குறள் ஆனது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையினை பற்றிய கருத்துக்களை கூறும் வகையில் அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இதில் 1330 திருக்குறளும், 133 அதிகாரங்களும் இடம் பெற்றுள்ளது. அதேபோல இந்த திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் இன்பத்து பால் என்ற முப்பெரும் பிரிவினை கொண்டுள்ளது. மேலும் திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும் அதில் இடம் பெறாத ஒரே எழுத்து ஒள என்று எழுத்து தான் என்பதும் மிகவும் முக்கியமானது ஆகும். திருக்குறள் திருவள்ளுவர் எழுதிய இந்த நூலானது உலகில் மிகவும் புகழ்பெற்ற தமிழ் இலக்கண நூலாகும். 1330 குறள்களையும் 133 அதிகாரங்களையும் கொண்டுள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார். அந்த வகையில் இன்றைய பதிவில் திருக்குறளில் இடம்பெற்றுள்ள கல்வி பற்றிய திருக்குறளை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

கல்வி திருக்குறள் 10

குறள்- 1

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பொருள்:

கற்கும் தகுதியான கல்வியினை சிறப்பான முறையில் கற்க வேண்டும், அவ்வாறு கற்று முடித்த பின்பு கற்ற கல்வியில் உள்ள நெறிகளை பிழையில்லாமல் பின்பற்றி நடக்கவும்.



குறள்- 2

எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.

பொருள்:

எண்ணும், எழுத்தும் இரு முக்கியமான கலையாக கருதுபவர் யாராக இருந்தாலும் அந்த இரண்டையும் அவருடைய வாழ்க்கையில் இரண்டு கண்ணாக நினைத்து தான் வாழுவார்.



குறள்- 3

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

பொருள்:

கல்வி கற்றவரை கண் உடையவர் என்றும், அத்தகைய கல்வியினை கற்காதவரை முகத்தில் இரண்டு புண்களை உடையவராக கருதப்படுகிறது.



குறள்- 4

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

பொருள்:

ஒன்றாக அனைவரும் சேர்ந்து மகிழும் படியாக பேசி சிரித்து விட்டு, பின்பு இவரை எப்போது மீண்டும் காண்போம் என்று நினைக்க வைக்கும் குணமே கல்வி அறிவினை பெற்றவரின் செயல் ஆகும்.



குறள்- 5

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லாத வர்.

பொருள்:

வறுமையில் உள்ளவர் செல்வம்மிக்க ஒருவரிடம் பணிந்து நின்று உதவியினை நாடுவது போல, ஆசிரியரிடம் தாழ்ந்து இத்தகைய கல்வியினை கற்பவர் உயர்ந்தவராகவும், கல்வியினை கற்காதவர் தாழ்ந்தவராகவும் கூறப்படுகிறது.



குறள்- 6

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

பொருள்:

பூமியில் உள்ள மணலினை தோண்ட தோண்ட எப்படி நீர் வருகிறதோ, அதனை போலத் தான் கல்வி கற்றவரின் அறிவும் கற்கக் கற்க அதிகரிக்கும்.



குறள்- 7

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

பொருள்:

கல்வியினை கற்ற ஒருவருக்கு எல்லா நாடும், எல்லா ஊரும் சொந்தமாக கருதப்படுகிறது, இவை அனைத்தும் கல்வியினை கற்காமல் இருப்பது தவறு.



குறள்- 8

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்(கு)
எழுமையும் ஏமாப்(பு) உடைத்து.

பொருள்:

ஒருவன் அந்த பிறவியில் கற்கும் கல்வி ஆனது அந்த பிறவி மட்டும் இல்லாமல் ஏழே ஏழு பிறவிக்கும் தலை சிறக்க வைக்கும்.



குறள்- 9

தாமின் புறுவ(து) உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

பொருள்:

தாம் கற்ற கல்வியினை மற்றவரும் கற்றுக்கொண்டு கற்று அதனால் மகிழ்ச்சியாக வாழ்வதனை பார்க்கும் போது இன்னும் மேலும் மேலும் கற்க வேண்டிய ஆர்வம் வரும்.



குறள்- 10

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

பொருள்:

கல்வி அறிவினை பெற்ற ஒருவர் அழிவில்லாத செல்வத்தினை பெற்றுள்ளதகவும், அத்தகைய கல்வி அறிவினை பெறாதவர் எவ்வளவு செல்வம் வைத்து இருந்தாலும் அது அழியக்கூடிய செல்வமிற்கு சமம் ஆகும்.

தொடர்புடைய பதிவு:
திருக்குறள் பற்றிய சிறப்பு கட்டுரை
திருக்குறள் சிறப்புகள்
10 எளிமையான திருக்குறள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now