2024-ல் காமராஜரின் வயது என்ன | Kamaraj Age in 2024..!

Advertisement

2024-ல் காமராஜரின் வயது என்ன | Kamaraj Age in 2024 | kamarajar Age Now

இன்று நாம் அனைவரும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து அதற்கு ஏற்றவாறு கல்வியினை படித்து வருகின்றோம். நாம் அனைவரும் இப்போது தான் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து இருக்கின்றோம். ஆனால் கல்வியினை சிறப்பை பற்றி முன்பே அறிந்து கல்விக்காக அயராது பாடுபட்ட தலைவர் தான் கர்ம வீரர் காமராஜர். இவர் தான் படிக்கவில்லை என்றாலும் கூட நாட்டு மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடங்களை அமைத்தவர். இவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ள கரமராஜருக்கு இன்று பிறந்தநாள். இவரின் பிறந்த நாளினை தான் நாம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். ஆகவே காமராஜரை பற்றிய இன்னும் சில தகவலை விரிவாகவும், 2024-ல் காமராஜருக்கு எத்தனை ஆவது பிறந்த நாள் என்று முழு தகவலையும் பார்க்கலாம் வாருங்கள்..!

Kamaraj Age in 2024:

karmaveerar kamarajar in tamil

விருதுநகர் மாவட்டத்தில் 1903-ஆம் ஆண்டு குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு ஜூலை மாதம் 15-ஆம் தேதி அன்று காமராஜர் மகனாய் பிறந்தார். காமராஜருக்கு பெற்றோர் இட்ட பெயர் காமாட்சி ஆகும். இவருக்கு அடுத்த படியாக நாகம்மாள் என்ற தங்கையும் இருந்தது.

இவர் தனது ஆர்மபக் கால பள்ளி படிப்பை 1907-ஆம் ஆண்டு படித்தார். பின்பு 1908-ஆம் ஆண்டு ஏனாதி நாராயண வித்யாசாலை பள்ளியிலும், 1909-ஆம் ஆண்டு விருதுப்பட்டி உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.

காமராஜரின் தந்தை இறந்த காரணத்தினால் இவர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே ஏழ்மை காரணமாக கை விட்டார். பள்ளிப் படிப்பை பாதியிலேயே முடித்து விட்டு அவருடைய மாமாவின் உணவுக் கடையில் வேலை பார்த்தார்.

அந்த கடையில் வேலை பார்த்துக் கொண்டு அரசியலை பற்றி சில விஷயங்களை தெரிந்துக்கொண்டார். பின்பு 18 வயதில் காமராஜர் முழு நேர அரசியலில் ஈடுபட்டார்.

1954-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக முதல் முதலில் பணியாற்றினார். பின்பு கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடம், மதிய உணவுத் திட்டம், சீருடை திட்டம் என எண்ணற்ற திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.

காமராஜர் செய்த எண்ணற்ற சாதனைகளும், அவரின் அயராது உழைப்பும், படிக்காத மேதை, தென்னாட்டு காந்தி, கர்ம வீரர், பெருந்தலைவர் என பல சிறப்பு பெயர்களிலும் அழைத்தனர்.

அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி 1975-ஆம் ஆண்டு சென்னையில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். மேலும் காமராஜரின் பிறந்த நாளை தான் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆகவே 2024-ஆம் ஆண்டில் காமராஜரின் 122-வது பிறந்த நாள் சிறப்பாக அனைவரும் கொண்டாடப்பட்ட வருகிறது. 

காமராஜர் பற்றி கட்டுரை

பெருந்தலைவர் கவிதை

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement