பெருந்தலைவர் கவிதை | Kamarajar Kavithai in Tamil 10 Lines..!

Advertisement

Kamarajar Kavithai in Tamil 10 Lines

நம்முடைய நாடு நலம் பெற வேண்டும் என்றும், நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று எண்ணற்ற தலைவர்கள் பல விதமான போராட்டங்களை நடத்தி வந்தார்கள். அத்தகைய வீரர்களின் வரிசையில் கர்ம வீரர் காமராஜரும் ஒருவராக இடம் பெற்று இருக்கிறார். இவர் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பெருந்தலைவர். அதேபோல் குழந்தைகள் அனைவரும் இலவச கல்வியினை பெற வேண்டும் என்று அயராது பாடுபட்டு பல வகையான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தவர். இப்படிப்பட்ட காமராஜரை புகழ்ந்து கூறும் வகையில் ஜூலை 15-ஆம் தேதி வருகின்ற அவருடைய பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையிலும் பெருந்தலைவரின் கவிதைகளை பற்றி 10 வரிகளில் பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கல்வி கண் திறந்த கர்ம வீரர் கவிதை:

 கல்வி கண் திறந்த கர்ம வீரர் கவிதை

குமாரசாமி சிவகாமியின் மைந்தனே
“கர்மவீரராய்” காலத்திலும் நிற்பவரே..!
படிப்பின் அவசியம் உணர்ந்த “படிக்காத மேதையே”..!
“பாரத ரத்னா விருது”ம் தேடி வந்ததே உன்னை தேடி..!

படிக்கும் பிள்ளைகளின் பசியை உணர்ந்தவரே..!
இலவச உணவை வழங்கி இன்புற்ற பெருந்தலைவரே..!
எளிமைக்கும் நேர்மைக்கும்
எடுத்துக்காட்டாய் விளங்கிய கர்மவீரரே..!

பதவி சுகம் இல்லாத
பண்பட்ட மானிடனே..!
“பெருந்தலைவர்” எனும்பட்டம்
போற்ற வேறு யாருமுண்டோ..?

மூன்று முறை தமிழக –
“முதலமைச்சராய்” இருந்தும் கூட,
முழுமையான வீடும் இல்லை…!
வசதியான வாழவும் இல்லை..!
வாழ்ந்த காலம் எல்லாமே –
வாடகை வீட்டில்தானே..!

“கருப்பு காந்தியாக”
காதர் உடுத்தி வாழ்ந்து வந்தாய்..!
“கல்வியின் நாயகனாக”
காலமெல்லாம் வருகிறாய்..!

பெருந்தலைவர் கவிதை:

கனலாய் தோன்றியது உன்னுள் பெரும் நெருப்பு
கல்வியின் பால் நீ கொண்ட நல்ஈர்ப்பு..!
சுழன்றாய் கதிராய் முதல்வராய் பதவி ஏற்று
சூரராய் நெஞ்சுரம் நெடுமைக் கொண்டு
சூழலை கல்வியால் மாற்றம் கண்டு
சுழியமாய் இருந்த வாழ்வை ஏற்றம் செய்து
சூத்திரத்தின் விதையாய் முளைத்தாய் அன்று
நேத்திரங்கள் கல்வியால் நிறைந்தது இன்று
கீரிவிட்ட பாதையினிலே செழித்த விருட்சம்
கீழை மேலை தேசங்களை கூவி அழைக்கும்
வாழையாய் எண்ணி கல்வி மரத்தை நட்டாய் அன்று
வானளவு சந்தன மரமாய் மணம் வீசுது உயர்ந்து
உணவோடு உன்னத கல்வியை ஊட்டி வளர்த்தாய்
உணர்வோடு உன்னைத் தொழுது வாழ்கிறோம் இன்று.

 Kamarajar கவிதை Tamil:

 kamarajar கவிதை tamil

விருதுபட்டி நகரில் சிவகாமி அன்னையின் தவப்புதல்வனாய் பிறந்து
கல்வி கண் திறந்து அறியாமை என்னும் இருளை போக்கியவர்..!
தமிழ்நாட்டு மக்கள் மனத்தில் நீங்க இடம் பிடித்து
ஏழை மக்களின் வாழ்வில் கவ்வி என்னும் ஒளியை கொண்டுவந்தவர்..!
பட்டித் தொட்டி எங்கும் பள்ளிகளை திறந்து
பசி அறியாமல் கல்வி பெற மதிய உணவு அளித்த வள்ளல்..!
தண்ணீரின் தேவையினை அறிந்த பல அணைகளை திறந்து
தன்னலமின்றி பொதுநலம் போற்றிய கர்ம வீரர்..!
ஏழைகளின் பங்காளனாய் எளிமையின் இலக்கணமாய்
மனிதநேயம் கொண்டு மாநிலத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர்..!

தொடர்புடைய பதிவுகள் 👇👇
காமராஜர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2023
காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்
காமராஜர் செய்த சாதனைகளை பற்றிய கட்டுரை
காமராஜர் பற்றிய 2 நிமிட பேச்சு
காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை
காமராஜர் பிறந்த நாள் வாழ்த்து கவிதை

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement