நாடு பார்த்ததுண்டா பாடல் வரிகள்| Karmaveerar Kamarajar Songs Lyrics in Tamil pdf

Advertisement

நாடு பார்த்ததுண்டா பாடல் வரிகள் | Nadu Parthathunda Song Lyrics in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாடு பார்த்ததுண்டா பாடல் வரிகள் (Kamarajar Nadu Parthathunda Song Lyrics in Tamil) தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். கர்ம வீரர் காமராஜர் பற்றி அறியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காமராஜரின் பெருமைகளையும், வாழ்க்கையில் அவர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்கள் என்பதை பற்றியும் அறிந்து இருப்பார்கள். காமராஜரின் வாழ்க்கை எளிமை, அவர் செய்த தியாகம், தொண்டுகள், சாதனைகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த உன்னத மனிதர் காமராஜர் ஐயா அவர்கள். கர்மவீரர் காமராஜர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். அவர் வாழ்ந்த இந்த காலத்தில் அவருக்கென்று வாழ்ந்ததை விட இந்நாட்டின் நலத்திற்காகவும் நாட்டு மக்களின் நாளத்திற்காகவும் தான் வாழ்ந்து இருக்கிறார். எனவே, அப்படிப்பட்ட உன்னத மனிதரை போற்றும் வகையில் இப்பதிவில் நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா காமராஜர் பாடல் வரிகளை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

காமராஜர் வாழ்க்கை வரலாறு

Kamarajar Nadu Parthathunda Song Lyrics in Tamil:

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தைப் பார்த்தானடா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டுப் படிக்க வைத்தானடா

மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா
ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானடா

இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே
திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா
தனைப் பெற்ற தாயை விடப் பிறந்த நாடு தான் பெரிது என்பானடா
ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா
கண்கள் ஊற்றும் நீரைத் தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா
வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

👉 karmaveerar kamarajar songs lyrics in tamil pdf

உன்னை போல் தலைவர் உண்டோ பாடல் வரிகள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement