பெருந்தலைவர் காமராஜரின் திட்டங்கள் | Kamarajar Nala Thittangal in Tamil | Kamarajar Thittam in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பெருந்தலைவர் காமராஜரின் திட்டங்கள் (Kamarajar Kondu Vantha Thittangal) எது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். 1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் தேதி அன்று விருதுநகரில் பிறந்து அதன் பிறகு தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்த காமராஜரின் சிறப்புகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆரம்ப காலத்தில் இவரின் சாதனைகள் பெரும்பாலும் அதிகமாக யாருக்கும் தெரியவில்லை என்றாலும் கூட காலங்கள் ஆக ஆக இவரின் தொண்டு அனைத்தும் மக்களிடம் பெரும் இடத்தை பிடித்தது. அதனால் மக்கள் அனைவரும் இவரை பெருந்தலைவர் என்றும், கர்மவீரர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை மற்றும் கல்விக்கண் தந்தை என்று எல்லாம் அழைத்தனர். இவரை பற்றி இந்த அளவிற்கு தெரிந்து இருந்தாலும் கூட இவரின் ஒரு சில திட்டங்கள் யாவும் சிலருக்கு தெரியாமல் உள்ளது. ஆகவே இதுநாள் வரையிலும் இவை அனைத்தும் தெரியாமல் இருந்தாலும் கூட தற்போது காமராஜரின் பிறந்தநாளிற்குள் ஆவது தெரிந்துக்கொள்ளும் விதமாக அவரின் திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
Kamarajar Nala Thittangal | Kamarajar Nirai Vetriya Thittangal:
கல்விக் கண் தந்த காமராஜர் முதலமைச்சராக பதிவியில் இருந்த போதிலும் சரி, இல்லாமல் இருந்த போதிலும் சரி எண்ணற்ற நன்மைகளை கல்விக்காக அளித்தார். அதுமட்டும் இல்லாமல் விவசாய மக்களின் நலன் கருதி பல திட்டங்களையும் அறிமுகம் செய்தார்.
இத்தகைய திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டள்ளது.
- மதிய உணவு திட்டம்
- கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடம்
- இலவச கல்வி திட்டம்
- சீருடை திட்டம்
- நெய்வேலி நிலக்கரித் திட்டம்
- காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்
- பவானி திட்டம்
- மணிமுத்தாறு திட்டம்
- ஆரணியாறு திட்டம்
- வைகை திட்டம்
- அமராவதி திட்டம்
- சாத்தனூர் திட்டம்
- கிருஷ்ணகிரி திட்டம்
- மேட்டூர் கால்வாய்த்திட்டம்
- கல்பாக்கம் அணு மின்நிலையம்
- திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்
- கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலைகளை
- பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
- கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
- சேலம் சுகர்ஸ் மில் லிமிடெட்
- கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை
மேலே சொல்லப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது கொண்டுவந்த திட்டம் ஆகும். மேலும் இதுபோன்ற பலத் திட்டங்கள் மக்களுக்காக கொண்டு வந்ததால் மக்கள் இத்தகைய ஆட்சியினை பொற்கால ஆட்சி என்று அழைத்தனர்.
பெருந்தலைவரின் திட்டங்கள்:
ராஜாஜி அறிமுகப்படுத்திய குடும்ப தொழில் அடிப்படியிலான கொள்கைகளை காமராஜர் நிறுத்திவிட்டார். பிறகு மூடி இருந்த 6000 பள்ளிக்கூடங்களை திறந்தார். மேலும் அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் 12,000 பள்ளிகளை திறந்தார். இதனால் கல்வி திறன் மேம்பட்டது.
கிராம புறங்களில் உள்ள குழந்தைகள் அதிக தூரம் நடந்து வந்து கல்வி பயின்றார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு வருவதை நிறுத்திட்டார்கள். அவர்களில் நலனில் அக்கறைகொண்டு அனைவருக்கும் சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்று கிராமப்புறங்களிலும் பள்ளிக்கூடத்தை திறந்துவைத்தார். இதனால் பல கிலோமீட்டர் தூரம் நடந்து வருவது தடுக்கப்பட்டது.
காமராஜர், படிக்கும் காலத்தில் ஒருவேளை உணவுக்காக அதிகம் கஷ்ட பட்டார். அதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒரு வேலை உணவு மட்டுமாவது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.
இளம் வயதிலே பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சாதிமத வேறுபாட்டை விதைக்க கூடாது என்ற நோக்கத்தில் இலவச பள்ளிசீருடை திட்டத்தை கொண்டுவந்தார்.
நீர்ப்பாசன திட்டங்கள் திட்டமிடப்பட்டது. பவானி,மணிமுத்தாறு, காவிரி டெல்டா, ஆரணி ஆறு, வைகை அணை, அமராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புல்லம்பாடி, பரம்பிகுளம் மற்றும் தொய்யாறு அணைகள் இவற்றுள் அடங்கும். விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் மானியத்துடன் கடன்கள் வழங்கபட்டது.
தொழிற்சாலை:
- நெய்வேலி லிக்னெட் திட்டம்
- நீலகிரி மூல புகைப்படச்சுருள் தொழிற்சாலை
- கிண்டியில் உள்ள அறுவை சிகிச்சை கருவி தொழிற்சாலை
- சர்க்கரை ஆலைகள்
- பைகார்பனேட் தொழிற்சாலைகள்
- சிமெண்ட் தொழிற்சாலைகள்
- இரெயில்பெட்டி தொழிற்சாலை
- மேட்டூர் காகித தொழிற்சாலை
- திருச்சி பெல்(BHEL) தொழிற்சாலை ஆகியவை காமராஜரின் காலத்தில் தொடங்கப்பட்டன.
காமராஜர் பற்றிய 2 நிமிட பேச்சு
காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |













