Kamarajar Patriya Thagavalkal
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காமராஜர் பற்றி பலருக்கும் தெரியாத அரிய தகவல்கள் (Kamarajar Patriya Thagavalkal) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். காமராசர் ஐயா பற்றி அறியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காமராஜர் பற்றி கூறுவார்கள். படிக்காத மேதை., கர்மவீரர், எளிமையின் சிகரம் என்றெல்லாம் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர். இவர் விருதுநகரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார்.
இவரது பெற்றோர், காமராஜருக்கு காமாட்சி என்ற பெயரினை வைத்தார்கள். ஆனால், செல்லமாக ராசா என்று கூப்பிடுவார்களாம். எனவே, காமாட்சி மற்றும் ராசா என்ற பெயரினை சேர்த்து காமராஜர் என்று அழைக்கப்பட்டார். இவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் சிறு வயதிலே பள்ளி படிப்பை முடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. அதன் பிறகு, நாடே போற்றும் உன்னத மனிதராக வாழ்ந்து காட்டினார். இவரை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இவர் வாழ்க்கை வரலாறு பெரிது. அவரை பற்றி நம்மில் பலருக்கும் தெரியாத சில தகவல்களை மட்டும் பின்வருமாறு விவரித்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
காமராஜர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரை
காமராஜர் பற்றிய அரிய தகவல்கள்:
- கட்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது உடன் இருப்பவர்கள் சாப்பிட்டபிறகு தான் காமராசர் ஐயா அவர்கள் சாப்பிடுவாராம்.
- காமராஜரிடம் பேசும்போது, அவர் தூய தமிழில் தான் பேசுவார். “அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி” என்று தமிழில் தான் பேசுவார்.
- காமராஜர் ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வாராம். அந்த அளவிற்கு ஞாபக சக்தி திறனுடையவர்.
- காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.
- தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டகாமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
- காமராஜர் ஐயா அவர்களுக்கு மலர்மாலை என்றால் அலர்ஜியாம். கழுத்தில் மாலை போட வந்தால் கழுத்தில் போட விடமால் கையிலே வாங்கி கொள்வாராம்.
- ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற பெயரை சூட்டினார்.
- காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்குமாம். இதனால், ஆருக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.
- 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றிஇருக்கிறார்.
- காமராஜர் எப்போதும் “முக்கால் கை” வைத்த கதர்ச் சட்டையும்,4 முழு வேட்டியையும் அணிவதைமட்டுமே விரும்பினார். ஆடம்பரமான துணிகளை விரும்ப மாட்டார்.
- காமராஜர் எப்போதும், ஒரு பீங்கான் தட்டில் தான் உணவு உண்பாராம். கடைசி வரை அந்த தட்டை தான் பயன்படுத்தியும் இருக்கிறார்.
- காமராஜர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கட்டாயம் பச்சை தண்ணீரில் குளிப்பாராம். காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார்.
- எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார்.
- வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி’என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி’ என்றால்`கறுப்பு காந்தி’ என்று அர்த்தம்.
- பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.
- காமராஜரின் நண்பர்களாக தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள்.
- காமராஜருக்கு தினமும் ஒரு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது. இரவு தூங்கும் முன்பாக புத்தகம் படித்து விட்டு தான் தூங்குவாராம்.
- காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.
- காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
- காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும் தான்.
- காமராஜர் ஐயா அவர்களுக்கு ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் போன்றவை அறவே பிடிக்காது.
காமராஜர் பற்றிய 2 நிமிட பேச்சு
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |