காமராஜர் வினாடி வினா | Kamarajar Quiz Questions and Answers in Tamil..!

Advertisement

காமராஜர் வினாடி வினா | Kamarajar Quiz Questions and Answers in Tamil..!

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காமராஜர் பற்றிய வினாடி வினா பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். கல்வி என்பது அனைவருக்கும் முக்கியமானது என்று கருதி எண்ணற்ற அம்சங்களை அளித்த மக்களில் ஒருவர் கர்ம வீரர் காமராஜர். இப்படிப்பட்ட சிறப்பினை செய்த பெருந்தலைவரின் பிறந்த நாளை தான் நாம் அனைவரும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான காமராஜரின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அவரை பற்றிய ஒரு சில கேள்விக்கான பதிலை வினாடி வினா மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே.

Kamarajar Quiz Questions and Answers:

  1. தமிழக அரசின் ஆட்சி மொழியாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது..?

விடை: 1956, டிசம்பர் 7.

2. பெருந்தலைவர் காமராஜர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக எந்த வயதில் சேர்ந்தார்..?

விடை: 16-வது வயதில்.

3. கர்ம வீரரின் பிறந்த நாளை எந்த ஆண்டு முதல் கல்வி வளர்ச்சி நாளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது..?

விடை: 2006.

4. காமராஜர் அவருடைய தனிப்பட்ட முயற்சியால் நிறுவிய அமைப்பு எது..?

விடை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி.

5. கர்ம வீரர் எந்த ஆண்டு காங்கிரஸ் உறுப்பினராக ஆனார் தெரியுமா..?

விடை: 1919.

6. நேருவின் தலைமையில் காமராஜரால் 1927-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற இடம் எது..?

விடை: விருதுநகர்.

7. காமராஜர் பல்கலைக்கழகம் தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது..?

விடை: மதுரை.

8. 1969-ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்ற தொகுதியின் பெயர் என்ன..?

விடை: நாகர்கோவில்.

9. மதிய உணவுத்திட்டத்தை முதல் முதலில் அறிமுகப்படுத்திய நபர் யார்..?

விடை: காமராஜர்.

10. குழந்தைகளுக்கான இலவச கல்வியினை காமராஜர் எது வரை நடைமுறைக்கு கொண்டுவந்தார்..?

விடை: தொடக்கப்பள்ளி.

11. தமிழக முதல்வராக காமராஜர் பதவியேற்ற ஆண்டு எது..?

விடை: 1954.

12. காமராஜரின் கல்வி தகுதி என்ன..?

விடை: 6-ஆம் வகுப்பு.

13. தியாகச்சுடர், மக்களின் மனதில் என்று நீங்கதா இடத்தை பிடித்தவர் என்று எல்லாம் காமராஜரை புகழ்ந்து பேசியவர் யார்..?

விடை: கருணாநிதி.

14. காமராஜரை கல்வி கண் திறந்தவர் என்று பாராட்டியது யார்..?

விடை: பெரியார்.

15. கர்ம வீரரின் அரசியல் குருவின் பெயர் என்ன..?

விடை: சத்தியமூர்த்தி.

16. காமராஜர் இறந்த வருடம் எது..?

விடை: அக்டோபர் 1903, 2-ஆம் தேதி.

17. காமராஜரின் பெற்றோர் பெயர் என்ன.?

விடை: தந்தை- குமாரசாமி; தயார்- சிவகாமி அம்மாள்.

18. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மாவட்டம் எது..?

விடை: விருதுநகர் மாவட்டம்.

19. காமராஜருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டு ஆண்டு..?

விடை: 1976.

20. உப்புசத்தியகிரகத்தின் போது காமராஜர் அடைக்கப்பட்ட சிறையின் பெயர் என்ன..?

விடை: அலிப்பூர்.

21. விருதுநகர் ஊராட்சிக்கு தலைவராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு..?

விடை: 1922.

22. காமராஜரின் முதல் அமைச்சரவையில் கலந்து கொண்ட அமைச்சர்களின் எண்ணிக்கை எத்தனை..?

விடை: 8.

23. வாள் சத்தியாகிரகத்தில் காமராஜர் கலந்து கொண்ட ஆண்டு எது..?

விடை: 1927.

24. பச்சை தமிழன் என்று காமராஜரை அழைத்தது யார் தெரியுமா..?

விடை: பெரியார்.

25. 2023-ஆம் ஆண்டு ஜூலை 15-ல் கொண்டாடப்படும் காமராஜரின் பிறந்தா நாள் எத்தனை ஆவது பிறந்த நாள் தெரியுமா..?

விடை: 121-வது பிறந்த நாள்.

26.காமராசர் பிறந்த ஊர் எது?

விடை: விருதுநகர்

27.காமராசரின் பெற்றோர் பெயர் என்ன?

விடை: குமாரசாமி சிவகாமி

28.காமராசர் வாழ்ந்த காலம் எது?

விடை: 1903-1976

29.காமராசர் இறந்த நாள் எது?

விடை: அக்டோபர் 2

30.காமராசரின் கல்வித் தகுதி என்ன.?

விடை: ஆறாம் வகுப்பு 

தொடர்புடைய பதிவுகள் 👇👇
காமராஜர் செய்த சாதனைகளை பற்றிய கட்டுரை
காமராஜர் பற்றிய 2 நிமிட பேச்சு
காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement