Kamarajar Sinthanaigal in Tamil
பொதுவாக மனிதர்கள் அனைவருக்கும் சிந்தனைகள் என்பது இருந்து கொண்டே தான் இருக்கும். அதேபோல் சிந்தனை என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும் கூட ஒவ்வொருவருக்கும் வேறு வேறு மாதிரியான சிந்தனைகள் இருக்கும். ஆனால் அதை நாம் தெரிந்துக்கொள்ள முடியாது. ஒருவேளை மற்றவரின் சிந்தனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் அதை அவர்களிடமே நேரில் கேட்டால் தான் தெரிய வரும். இவ்வாறு இருக்கையில் இன்றைய இது தொடர்பான ஒரு பயனுள்ள பதிவை தான் பார்க்கப்போகிறோம். அதாவது நாம் எப்போதும் ட்ரெண்டிங்கில் அதிகமாக உள்ள ஒரு விஷயத்தை தெரிந்துகொள்வதில் தான் அதிக ஆர்வத்தினை செலுத்துவோம். அப்படி பார்த்தால் இப்போது கர்ம வீரர் காமராஜரை பற்றிய செய்திகள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஆகவே காமராஜரின் சிந்தனைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
காமராஜரின் சிந்தனைகள்:

உழைத்து வாழ்வோம்:
உழைத்தால் மட்டுமே நமக்கான ஊதியத்தை பெற முடியும் என்பது ஒரு உணர முடிந்த உண்மையாக உள்ளது. அதனால் நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கு உழைத்தால் மட்டுமே வீட்டும், நாடும் மேலோங்கி நிற்கும் என்பது கர்ம வீரரின் சிந்தனையாக இருந்தது.
அதனால் கர்ம வீரர் மூளையினையும், உடலையும் செயல்படுத்தி உழைத்து வாழ்வோம் என்று கூறினார். மேலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை யாரும் கொடுக்காவில்லை என்றாலும் அதனை கேட்டு பெறுங்கள் என்றும் சுட்டிக் காட்டினார்.
அரசியல்:
அரசியல் என்பது ஒருவரின் வாழ்க்கையினை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை பெற்றது. அதனால் படிக்கும் வயதில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.
ஏனென்றால் பள்ளி பருவத்தில் அரசியலில் ஈடுபடுவது என்பது படிப்பை முற்றிலுமாக வீணாக்கி படிப்பு அறிவு என்பது இல்லாமல் போய்விடும் நிலைமை ஏற்பட்டு விடும் என்பதால் படிக்கும் வயதில் அரசியல் வேண்டாம் என்ற சிந்தனையினை காமராஜர் வெளிப்படுத்துகிறார்.
கோழையாக வாழாதே:
ஏழையாக வாழ்ந்தாலும் ஒரு போதும் கோழையாக வாழாதே என்று காமராஜர் அனைவருக்கும் உரைக்கும் படி கூறியிருக்கிறார்.
அதாவது நாம் ஒரு செயலிற்காக அஞ்சி அஞ்சி வாழ்வதை விட அதை துணிச்சலாக எதிர்த்து போரிட்டு வாழ்வதே மேல் என்று அனைவருக்கும் தன்னை தானே எடுத்துக்காட்டாகவும் கூறினார்.
எளிமையான வாழ்வு:
ஆடம்பரமான வாழ்க்கையை விட எளிமையான வாழ்க்கையே மனிதிற்கு அமைதினையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று கூறினார்.
அதேபோல் ஒவருவரும் வேற்றுமையுடன் வாழ்வதை விட அனைவரும் சமம் என்று நினைத்து மகிழ்ச்சியாக வாழ்வதே உண்ணதமான வாழ்க்கை என்று அனைவருக்கும் கூறி அதற்க்கு ஏற்றமாதிரியான ஒரு வாழ்வையும் வாழ்ந்தார்.
சட்டத்தை மதித்து:
சட்டத்தை யார் ஒருவர் உருவாக்கினாரோ அவர் தான் அதற்கு ஏற்றவாறு அவற்றை எல்லாம் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று நினைக்காமல் அனைவரும் சட்டத்திற்கு ஏற்றவாறு வாழ வேண்டும் என்று கருதினார்.
மேலும் செய்யும் பணி எதுவாக இருந்தாலும் அதனை மதித்து செய்ய வேண்டுமே லஞ்சம் எதுவும் வாங்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
மேலே சொல்லப்பட்டுள்ள சிந்தனைகள் அனைத்தினையும் காமராஜர் கூறியதோடு மட்டும் இல்லாமல் அதற்க்கு அவர் தன் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரியாகவும் வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
காமராசரின் சிந்தனைகளும் செயல்களும்:
ஏழைகளுக்கு உதவிடுங்கள்:
பெருந்தலைவர் காமராஜர் தலைவராக இருந்த போது சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது நிறைய நபர்கள் துண்டு போர்த்தினார்கள். அங்கு இருந்த தொண்டர் ஒருவர் அந்த துண்டிலுருந்து ஒரு துண்டினை எடுத்து வைத்து கொண்டார். காமராஜர் தங்கும் இடத்திற்கு வந்த பிறகு அந்த தொண்டரிடம் நீ ஒரு துண்டு எடுத்து வைத்துள்ளாய் அல்லவா! அதனை கொடுத்து விடு என்று கூறினார். அதற்கு அந்த தொண்டன் இந்த ஒரு துண்டு எடுத்து வைத்ததை ஞாபகம் வைத்திருந்து கேட்கிறார். அதற்கு காமராஜர் இந்த துண்டுகள் எல்லாம் ஏழைகளுக்காக உதவுவதற்காக கொடுத்தது
- லஞ்சம் வாங்காதீர்
- ஒற்றுமையோடு வாழுங்கள்
- உழைப்புக்கு ஏற்ற கூலி கேளுங்கள்
- சட்டத்தை மதித்திடுங்கள்
- எளிமையோடு இருங்கள்
- வீரமுடன் வாழுங்கள்
- உழைத்து வாழ வேண்டும்
- படிக்கும் போதே அரசியல் வேண்டாம்
- வீண் வம்பிலிருந்து விலகி இருங்கள்
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |














