பொற்காலம் தந்த பெருந்தலைவர் பாடல் வரிகள்..!

Advertisement

Kamarajar Songs in Tamil Written

ஒரு வருடத்தில் மொத்தம் 365 நாட்கள் உள்ளது. இத்தகைய நாட்களில் நமக்கு முக்கியமான நாட்கள் என்று எப்படி 10 முதல் 15 நாட்கள் வரை இருக்கும். ஆனால் அத்தகைய நாட்களை எல்லாம் நாம் சரியாக ஞாயபகம் வைத்து கொள்வது என்பது கொஞ்சம் கடினம் தான். அந்த வகையில் ஜூலை 15-அன்று பிறந்தநாள் காணும் கர்மவீரனின் பிறந்தநாள் அனைவருக்கும் நினைவில் இருக்கிறதா என்று சரியாக தெரியவில்லை. அப்படி என்ன அந்த நாளில் சிறப்பு என்று ஒரு சிலர் யோசிக்கலாம். அதாவது காமராஜரின் நாட்டின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்குகாகவும் அயராது பாடுபட்டவர். அதுமட்டும் இல்லாமல் காமராஜர் பிறந்த நாளை தான் நாம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். ஆகவே ஒன்று பெருந்தலைவர் காமராஜரின் பாடல் வரிகளை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

நாடு பார்த்ததுண்டா பாடல் வரிகள்:

kamarajar nala thittangal

நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்

இந்த நாடு முன்னேற
நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா

பள்ளி அறியாமத பிள்ளை பல பேரின்
முகத்தை பார்த்தானம்மா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு
படிக்க வைத்தானம்மா

மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த
மகராஜன் இவன் தானம்மா
இந்த ஊரு உலகெங்கும் தேடிப் பார்த்தலும்
ஈடு எவன் தானம்மா
வலிமை இருந்த போதும்
மிக எளிமையோடு இருந்தார்

பிள்ளை உள்ளம் கொண்ட
எங்கள் கருப்பு காந்தி இவரே

நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா

பதவி இருந்தாலும் பதவி போனாலும்
உதவி புரிவானம்மா
தன்னைப் பெற்ற தாயை விட
பிறந்த நாடுதான்
பெரிது என்பானம்மா

ஆற்று நீரையே அணைகள் கட்டியே
தேங்க வைத்தானம்மா
அங்கு தேங்கும் நீரில் மின்சாரம் எடுத்து
விளக்கேற்றி வைத்தானம்மா

வலிமை இருந்த போதும்
மிக எளிமையோடு இருந்தார்

பிள்ளை உள்ளம் கொண்ட
எங்கள் கருப்பு காந்தி இவரே

நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்

இந்த நாடு முன்னேற
நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா..!

Karmaveerar Kamarajar Songs Lyrics:

 karmaveerar kamarajar songs lyrics in tamil
 

ஆட்சியில் புதுமை செய்து அனைவரின்
மனதில் நின்று ஆட்சி செய்த உத்தமரு தான்
நல் ஆட்சி செய்த உத்தமரு தான்

கறுப்புக் காந்தி பெயரை கொண்டு கல்வி கண்
திறந்த எங்கள் காமராசர் காமராசர் தான்
நல்ல காமராசர் காமராசர் தான்

ஆட்சியில் புதுமை செய்து அனைவரின்
மனதில் நின்று ஆட்சி செய்த உத்தமரு தான்
நல் ஆட்சி செய்த உத்தமரு தான்

கறுப்புக் காந்தி பெயரை கொண்டு கல்வி கண்
திறந்த எங்கள் காமராசர் காமராசர் தான்
நல்ல காமராசர் காமராசர் தான்

கல்விக் கூட மதிய உணவும், சீருடையும் கூட தந்து
ஊரு மெச்ச வாழ்ந்து வந்த ஒரே ஒரு உத்தமரு

படிக்காத மேதை என்று பேரெடுத்த சிங்கம் தான்
காந்தியும், நேருவும் காட்டும் வழி நின்றவர் தான்
பெருந்தலைவரே நீங்கள் வேணும் மீண்டும் மீண்டும் ஆளத் தான்

ஆட்சியில் புதுமை செய்து அனைவரின்
மனதில் நின்று ஆட்சி செய்த உத்தமரு தான்
நல் ஆட்சி செய்த உத்தமரு தான்

கறுப்புக் காந்தி பெயரை கொண்டு கல்வி கண்
திறந்த எங்கள் காமராசர் காமராசர் தான்
நல்ல காமராசர் காமராசர் தான்

அணைகளோடு பாலமும்
தொழிற்சாலையோடு வேலையும் செய்து தந்த முதல்வரே
எங்கள் காமராசர் தான்

நேர்மையோடும், தூய்மையோடும் ஆட்சி செய்த தங்கம் தான்
குமாரசாமி சிவகாமியும் பெற்றடுத்த வைரம் தான்
பெருந்தலைவரே நீங்கள் வேணும் மீண்டும் மீண்டும் ஆளத் தான்

ஆட்சியில் புதுமை செய்து அனைவரின்
மனதில் நின்று ஆட்சி செய்த உத்தமரு தான்
நல் ஆட்சி செய்த உத்தமரு தான்

கறுப்புக் காந்தி பெயரை கொண்டு கல்வி கண்
திறந்த எங்கள் காமராசர் காமராசர் தான்
நல்ல காமராசர் காமராசர் தான்

நல்ல காமராசர் காமராசர் தான்..!

தொடர்புடைய பதிவுகள் 👇👇
காமராஜர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2023
காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்
காமராஜர் செய்த சாதனைகளை பற்றிய கட்டுரை
காமராஜர் பற்றிய 2 நிமிட பேச்சு
காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை
காமராஜர் பிறந்த நாள் வாழ்த்து கவிதை

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement