கனவில் பணம் வருவது நல்லதா கெட்டதா..? Kanavil Panam Vanthal Enna Palan in Tamil..!
Kanavil Panam Vanthal / kanavil panam vanthal enna palan in tamil:- பொதுவாக நாம் காணும் கனவிற்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வதற்கு அதிக ஆர்வமாக இருக்கும். இதற்காக நாம் நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகளிடம் அல்லது நமக்கு தெரிந்த பெரியவர்களிடம் நாம் கண்ட கனவினை கூறி அதற்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம். அந்த வகையில் நம்மில் பலருக்கு பணம் பற்றிய கனவு வந்திருக்கும் எனவே இந்த பதிவில் நாம் கனவில் பணம் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கனவில் பணம் கொடுப்பது போல் வந்தால் என்ன பலன், panam kidaipathu pol kanavu vanthal இதுபோன்ற கனவுகள் வந்தால் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
| இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..! |
பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Kanavil Panam Kandal:-
கனவில் பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் தங்களுக்கு விரைவில் பணம் நெருக்கடி ஏற்படலாம் என்று அர்த்தமாகும். எனவே தாங்கள் பணம் கொடுக்கல் வாங்குதலில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
கனவில் பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
kanavu palan panam:- உங்களுடைய கனவில் ஒருவரிடமிருந்து பணம் பெறுவது போல் கனவு கண்டால் தங்களுக்கு கூடிய விரைவில் தனலாபம் வந்து சேரும்.
கனவில் பணம் தொலைந்தால்:-
தங்களுடைய கனவில் பணம் தொலைந்துபோவது போல் அல்லது திருட்டு போவது போல் கனவு கண்டால் தங்களுடைய கையிருப்பு கரையும் அதேபோல் யாருக்காவது பணம் கொடுத்திருந்தால் அந்த பணம் திரும்பவராது. தங்களுடைய நட்பும் முறியலாம்.
Panam Kidaipathu Pol Kanavu Vanthal

தங்களுடைய கனவில் பணம் கிடைக்கின்றது ஆனால் எங்கிருந்து கிடைக்கின்றது என்று தெரியாமல் இருந்தால் தாங்கள் மற்றவர்களுக்கு உதவும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் புதிதாக ஏதாவது ஜாமீன் கையெழுத்து போடும்பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தாங்கள் பணத்தை தெருவில் விட்டெறிவது போல் கனவு கண்டால் தங்களுக்கு நண்பர்களால் ஏதாவது பிரச்சனை ஏற்படும்.
பணம் நோட்டு கட்டுகளை அடிக்கி வைப்பது போல் கனவு கண்டால் தங்களுக்கு அதிக வருவாய் வந்தாலும், அந்த வருவாயை தாண்டி தங்களுக்கு செலவும் வரும்.
பண கட்டுகளை துண்டு துண்டாக கிழிப்பது போல் கனவு கண்டால் தங்களுக்கு இரண்டு வாரத்திற்குள் யாரிடமிருந்தாவது பணம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
கீழ் கிடைக்கும் பணத்தை எடுப்பது போல் கனவு கண்டால் தங்களுக்கு யாரிடமிருந்தாவது நல்ல தொகை கிடைக்கப்போவதாக அர்த்தமாகும்.
பணத்தை கிழிப்பது போல கனவு:
பணத்தை கிழிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு எதிர்ப்பாராத விதமாக பணம் கிடைக்க போகிறது என்று அர்த்தம்.
கனவில் சில்லறை காசு கொடுப்பது போல கனவு:
சில்லறை காசை கனவில் கண்டால் பணம் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. மற்றவர்களிடம் பணம் கொடுக்கிறீர்கள் என்றால் அதில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். சுருக்கமாக கூறினால் பணம் கொடுக்கல் வாங்கல்களில் கவனம் வேண்டும்.
காசு கிடைப்பது போல கனவு கண்டால் நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் கவனமாக இருக்க வேண்டும்.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |









