கந்த சஷ்டி விரதம் 2024 ஆரம்பம் | Kandha Sashti Viratham 2024 in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2024 ஆம் ஆண்டிற்கான கந்த சஷ்டி விரதம் எப்போது ஆரம்பம் ஆகி எப்போது முடிவடைகிறது.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். முருகனுக்கு எடுக்கக்கூடிய சக்தி வாய்ந்த விரதம் கந்த சஷ்டி விரதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அனைவருக்கும் பிடித்த தமிழ் கடவுளான முருகனை கார்த்திகேயன் என்று அழைப்பார்கள். முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் தான் பக்தர்கள் அதிகம்.
வேண்டிய வரங்களை அளிப்பவர் முருகர். முருகு என்ற சொல்லிற்கு அழகன், இளமை என்று பொருள். எனவே, முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் அவருடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும். எனவே, அவருக்கு உகந்த சஷ்டி திதி நாளில் முருகருக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். மாதம் மாதம் சஷ்டி திதி வந்தாலும், வருடத்திற்கு ஒருமுறை தான் கந்த சஷ்டி விரதம் வரும். எனவே, இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் 2024 எப்போது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொண்டு விரதம் இருந்து முருகனின் அருளை பெறுங்கள்.
7 Days Sashti Viratham 2024 November in Tamil:
முருக பெருமான், சூரபத்மன் என்னும் சூரனை அளித்தார். அதாவது, ஆறு நாட்கள் நடந்த சூர சம்காரத்தின் முடிவில் முருகன் சூரனை அளித்தார். எனவே, முருக பெருமான் சூரனை அளித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் விழா ஆகும். சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். ஐப்பசி மாதம் வரக்கூடிய சுக்ல பட்சம் பிரதமை திதி முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலம் ஆகும்.
கந்த சஷ்டி காலத்தில், காலையில் எழுந்து நீராடி முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்து விரதம் இருந்து வழிப்படுவார்கள். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் உண்டு கடைசி நாளான ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வார்கள்.
2024 ஆம் ஆண்டிற்கான கந்த சஷ்டி விரதம் நவம்பர் மாதம் 02 ஆம் தேதி (ஐப்பசி 16 ஆம் தேதி) சனிக்கிழமை அன்று தொடங்கி நவம்பர் மாதம் 07 ஆம் தேதி (ஐப்பசி 21 ஆம் தேதி) வியாழக்கிழமை அன்று முடிவடைகிறது. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரத நாட்கள் ஆகும். கந்த சஷ்டி காலத்தின் கடைசி நாளான வியாழன்கிழமை அன்று சூரசம்ஹாரம் விழாவும் உள்ளது.சஷ்டி விரதம் அன்று திருமணம் செய்யலாமா..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |