கன்னி தீட்டு எத்தனை நாட்கள் | தீட்டு நாட்கள் | பூப்பெய்தல் தீட்டு எத்தனை நாட்கள்
நமது பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு விதமான சடங்குகளை பெரியவர்களின் ஆலோசனை படி செய்துகொண்டுதான் வருகின்றோம். என்னதான் காலம் மாறினாலும் நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்களை நாம் மாற்றுவதில்லை. அப்படி நாம் பின்பற்றும் ஒன்று தான் இந்த தீட்டு கடைபிடிப்பது, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காரணத்தை நமது பெரியவர்கள் வைத்திருப்பார்கள் அது அனைத்தும் நம்மை நல்வழிக்கே அழைத்து செல்லும் அதனால் தான் இன்று வரை இந்த மாதிரியான விஷயங்களை பின்பற்றி வருகின்றோம்.
இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது நிறைய பேர் தேடிக்கொண்டிருக்கும் ருது தீட்டு எத்தனை நாள் அதாவது கன்னி தீட்டு எத்தனை நாட்கள். இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொல்வார்கள். உண்மையில் Kanni Thettu Ethanai Naal என்று தெரிய இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னி தீட்டு என்றால் என்ன?
நீங்கள் பூப்பெய்தல் தீட்டு எத்தனை நாள் என்பதை அறிவதற்கு முன்னர் கன்னி தீட்டு என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். கன்னி தீட்டு என்று எப்பொழுது சொல்லப்படும் என்றால், ஒரு குழந்தை சிறுமி என்ற நிலையைக் கடந்து தாய்மைக்குத் தயாராகும் நிலையே ருது என்று சொல்வார்கள். அந்த காலத்தில் 16 வயதை தோட்ட உடனே பெண்கள் வயதுக்கு வந்துவிடுவார்கள், இந்தக்காலத்தில் அவர்களின் உடம்பு வாகை பொறுத்து இது மாறுபடுகிறது.
அப்படி பூப்பெய்த பெண்ணை தான் கன்னித் தீட்டு என்று சொல்வார்கள்.
தீட்டின் விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!
தீட்டு நாட்கள் | ருது தீட்டு எத்தனை நாள்
ஒவ்வொரு சடங்கிற்கு தீட்டு நாட்கள் மாறுபடும், இங்கே பூப்பு எய்திய பெண்ணைப் பதினாறு நாள் வரை தனிமைப்படுத்தி, அவளை தொடாமல் அவளுக்கு சடங்கு செய்து பின்பு தங்கள் குடும்பத்தாருடன் சேர்த்துக்கொள்வார்கள்.
பூப்பெய்தல் தீட்டு எத்தனை நாள்
பொதுவாக கன்னி தீட்டு எத்தனை நாட்கள் என்ற கேள்விக்கு பதிலாக அனைவரும் சொல்வது 16 நாட்கள் ஆகும். இந்த 16 நாட்கள் வரை பூப்பு எய்திய பெண் யாரையும் தொடாமல் இருப்பார்கள், அதன்பிறகு அவர்களுக்கான சடங்கு நடந்து அவர்களை வீட்டிற்கு அழைப்பார்கள்.
ஆனால் உண்மையில் Kanni Thettu Ethanai Naal என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு பெண் பூப்பு எய்திய நாளில் இருந்து கணக்கு செய்து இந்த பூப்பெய்தல் தீட்டு எத்தனை நாள் என்பது கணக்கிடப்படும், அது பத்து நாட்கள் என்று சொல்வார்கள், ஏனென்றால் இவர்கள் கன்னித் தீட்டு என்பதால் காத்து கருப்பு அண்டிவிடும் என்பதால் 10 நாள் வரை எங்கும் வெளிய விடமாட்டார்கள்.
பங்காளி தீட்டு எத்தனை நாட்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் என்றால் அவளுக்கு 3-ஆம் நாள் சடங்கு செய்து 5-ஆம் நாள் புண்ணியதானம் செய்தலே தீட்டு நீங்கிவிடும். புண்ணியதானம் செய்த பின்னர் நீங்கள் கோவிலுக்கு கூட செல்லலாம், எப்பொழுது நீங்கள் புண்ணியதானம் செய்தீர்களோ அன்றைக்கே அந்த கன்னித் தீட்டானது முடிந்துவிட்டது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |