இன்றைய பதிவில் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியவை என்பதை பற்றி பார்க்க போகிறோம். ஒரு பெண் கர்ப்பம் அடைதல் என்பது அப்பெண்ணிற்கு மட்டும் இல்லாமல் அந்த குடும்பத்திற்கே மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு தருணமாக தான் உள்ளது. அந்த வகையில் பார்த்தோம் என்றால் சிலருக்கு குழந்தை பாக்கியம் என்பதே இல்லாமல் கூட இருக்கிறது. கர்ப்பமாக இருப்பவர்களுக்கு என்று சில விதிகள் இருக்கிறது. அவற்றை பின்பற்றி நடந்தால் உங்களின் கர்ப்ப காலம் சிறப்பாக இருக்கும்.
மேலும், ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் என்பது கவனமாக இருக்க வேண்டிய கால கட்டமாகும். ஏனெனில் குழந்தை வளர்ச்சி என்பது தாயின் உடல் நலனை பொறுத்தே அமைகிறது. கர்ப்பமாக இருக்கும் போது ஒன்பது மாதங்களும் கவனமாக இருக்க வேண்டும். சில விஷயங்களை நீங்கள் தவறாக கடைபிடிக்கும் போது குழந்தை வளர்ச்சி மற்றும் பிரசவ காலத்தில் சிக்கல் ஏற்படக் கூடும். இன்றைய பதிவில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
கர்ப்பிணி பெண்கள் செய்ய கூடாதவை:
எண்ணெய் குளியல் மற்றும் எண்ணெய் மசாஜ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கருவுற்ற 30 நாட்களில் கருச்சிதைவு ஏற்பட மனஉளைச்சலும் ஒரு காரணம் ஆகும். இப்படி ஏற்படாமல் இருக்க பயம்,பதற்றம் மற்றும் கோபம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் தூங்கி கொண்டிருக்கும் போது அவர்களை சத்தம் போட்டு எழுப்பக் கூடாது.
கர்ப்பிணி பெண்கள் சிறுநீரை அடக்க கூடாது. அப்படி செய்தால் சிறுநீரக கற்கள் ஏற்படக் கூடும்.
உயரமான படிகள் ஏறுதல், மாடி படிகளில் அடிக்கடி ஏறுவது மற்றும் காலடி சத்தம் கேட்கும் வகையில் பலமாக நடப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் அதிகமான எடையுள்ள பொருள்களை தூக்க கூடாது.மேலும், அதிக தூரம் பயணம் செய்யவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதத்திற்கு உடலுறவு கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும்.
கர்ப்பிணி பெண்கள் ஷெல் மீன்கள், அதிக சூடான மற்றும் குளிர்ச்சியான, பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பச்சை முட்டை போன்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் காஃபி, தேநீர் மற்றும் சாக்லேட், சோடா போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாவே மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் உட்காருவது மற்றும் நிற்பது போன்றவை கணுக்கால் வீக்கம், நரம்பு பிரச்சனை போன்ற சிக்கலை ஏற்படுத்தும்.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்..!
கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை :
கர்ப்பிணி பெண்கள் மல்லாந்து படுப்பதும் குப்புற படுப்பதும் கூடாது. மல்லாந்து படுக்கும்போது குழந்தைக்கு மூச்சி திணறல் ஏற்படக் கூடும்.
ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் படுக்கும்போது எழுந்து உட்கார்ந்து மறுபக்கம் படுக்க வேண்டும்.
9 ஆம் மாதம் இடது புறமாக ஒருபக்கம் படுப்பதன் மூலம் கருப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |













