சுதந்திர தின கவிதைகள் | Kavithai About Independence Day in Tamil..!
இந்திய நாட்டில் பிறந்த நாம் அனைவரும் இவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறோம் என்றால் அதற்கு பின்னால் ஏதோ ஒரு போராட்டங்கள் இருக்கிறது என்று தான் அர்த்தம். ஏனென்றால் எந்த ஒரு விஷயமும் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவது இல்லை. அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பின்பாக தான் நம்முடைய இந்தியா ஆனது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அன்று சுதந்திரம் பெற்றது. இத்தகைய சுதந்திரத்தை ஆங்கிலேயரிடம் இருந்து பெறுவதற்காக எண்ணற்ற போராட்டங்களையும், இரத்தங்களையும் நம் நாட்டில் வாழ்ந்த மஹாத்மா காந்தி, நேரு, திருப்பூர் குமரன் மற்றும் பாரதியார் என பல தலைவர்கள் செய்து உள்ளனர். ஆகவே நாம் அனைவரும் இத்தனை வகையான சிக்கலுக்கு பிறகு பெறப்பட்ட சுதந்திர தினத்தினை தான் கொண்டாடி வருகின்றோம். மேலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று 78-வது சுதந்திர தினவிழா வருவதால் அதனை பெருமிதம் போற்றும் வகையில் சுதந்திர தின கவிதை வரிகளை இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
Independence Day Kavithai in Tamil:
எந்தன் இந்திய நாடே
உந்தன் கொடியின் நேசம்
கடல் கடந்தும் வீசும்.!
உந்தன் மடியின் பாசம்
அதையறியும் பல தேசம்
Independence Day Poem in Tamil:
பல மொழிகளால் பிளவுபட்டாலும் உன்னால் ஒரே இந்தியனாய் ஒருமைப்பட்டோம்
Suthanthira Thina Kavithaigal:
இயந்திரமாய் வாழ்ந்த இந்தியனை பலர் கண்டு வியந்திடுமாய் மாற்றியது எந்தன் சுதந்திரமே..!
சுதந்திர தின கவிதைகள்:
சொல்லிக் கொடுங்கள்
சுதந்திரம் என்பது நம்
ஒற்றுமைக்கும் ஒருமைக்கும்
பொறுமைக்கும் தந்த பரிசு
என்று.
இந்திய சுதந்திரம்
இருளில் கிடைத்த
புது விடியல்.
சுதந்திரத்திற்காக தங்கள்
சுவாசங்களை தியாகம்
செய்த நேச நெஞ்சங்களை
நினைத்து மகிழ்வோம்.
சுதந்திர தின கவிதைகள் தமிழில்:
போராடி சுதந்திரத்தை
பெற்றுக் கொடுத்ததால்
நாட்டின் தலைவர்களாய்
போராட்டத்தை விதைத்தனர்..!
அடுத்தடுத்த தலைவர்களும்
சுதந்திரத்தை மதித்து
நாட்டுக்காய் உழைத்து
மகிழ்ச்சியை விதைத்தனர்..!
நாளைய தலைவர்களுக்கு
சுதந்திரம் என்பது
இனிப்பு கொடுக்கும்
தினத்துடன் முடிந்திடுமோ..!
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை
Independence Day கவிதைகள்:
ஓராண்டு இல்லை தம்பி நூறாண்டு என்று
பிரிட்டிஷ் நம்மை ஆட்டி வைத்ததே அன்று
ஒற்றுமை குலைந்தது கலாச்சாரம் அகன்று
இதை நினைத்தாலே மனம் குமுறுது இன்று
சுதந்திர உணர்ச்சி என்ற தீபம் ஏந்தி
நடை போட்டார் மஹாத்மா காந்தி
துப்பாக்கி முனையில் போர் புரிய
போஸும் முனைந்தாரே உலகறிய
திலகர் ஒரு பக்கம் கூக்குரலிட்டர்
சந்திரசேகர் ஆசாத் உயிர் விட்டார்
சர்தார் படேல் போர்க்கொடி ஏந்தினர்
லால் பகதூர் பிரிட்டிஷை சாடினார்
கவிஞர்களின் மையில் சுதந்திர வெறி
மகாகவி பாரதிதான் இதில் மிகவும் குறி
எவ்வளவு மனிதர்கள் குடும்பத்தை மறந்து
உயிரையும் தியாகம் செய்தனர் துணிந்து
விண்ணை பிளந்தது சுதந்திர முழக்கம்
தொடர்ந்தது ஒத்துழையாமை இயக்கம்
பலதேசத்தலைவர்களின் ராஜதந்திரம்
இவற்றால் கிட்டியது இந்திய சுதந்திரம்
ஓராண்டு இல்லை தம்பி நூறாண்டு என்று
பிரிட்டிஷ் நம்மை ஆட்டி வைத்ததே அன்று
ஒற்றுமை குலைந்தது கலாச்சாரம் அகன்று
இதை நினைத்தாலே மனம் குமுறுது இன்று.!
இண்டிபெண்டன்ஸ் டே கவிதை:
தேசிய கொடி பறக்கிறது
பல தியாகிகள் வாழ்க்கை இருக்கிறது
தேசத்தந்தையின் அகிம்சை தெரிகிறது
பல வேதனைகளை மனம் தாக்கியது
வெள்ளையனே வெளியேறு என்ற
வார்த்தை கேட்கிறது
சுதந்திரமாய் வாழ மனம் நினைக்கிறது
அடிமை சாசனம் மறுக்கிறது
கொடி காத்த குமரனை நெஞ்சம் போற்றுகிறது
அன்பு கருணை தியாகம் என்று
மூன்று வர்ணத்தில் தேசிய கொடிபறக்கிறது
இதுவே இந்தியாவின் அடையாளமாய்
என்றும் இருக்கிறது..!
நமது தேசியக் கொடி கட்டுரை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |