Kidney Beans in Tamil
உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டினால் மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறையால் ஏற்படும் அனைத்து உடல்நல குறைபாடுகளையும் எதிர்த்து இந்த உலகில் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நமக்கு பெரிதும் உதவுவது நாம் சாப்பிடும் ஆரோக்கியமான உணவுதான். அப்படி நமக்கு மிகவும் உதவும் உணவுகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் இல்லை என்பதே உண்மை. அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், வகைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. எனவே தான் இன்றைய பதிவில் ராஜ்மாவின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Kidney Beans Details in Tamil:
ராஜ்மா என்பது பொதுவாக பீன்சு வகையைச் சார்ந்த உணவுப்பொருள் ஆகும். அட்சுக் பீன்சுவிலிருந்து வேறுபடுத்தப்பார்ப்பது கொஞ்சம் கடினம். இப்பயறு சிகப்பும் பழுப்பு நிறமும் கலந்து காணப்படுகிறது.
வட இந்தியப்பகுதிகளில் அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பெயர் காரணம்:
இந்த ராஜ்மா பார்ப்பதற்கு சிறுநீரகம் போல் இருப்பதால் இதற்கு கிட்னி பீன்ஸ் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொண்டக்கடலை பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம்
பிறப்பிடம்:
இதன் பிறப்பிடம் என்று போர்ச்சுகல் கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது இது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.
வேறுபெயர்கள்:
இது தமிழில் ராஜ்மா என்றும், மற்ற மொழிகளில் பிரஞ்சு பீன், ஹரிகோட் பீன் அல்லது கிட்னி பீன் என்றும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
புளிய மரம் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்கள்
ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் நன்கு சமைத்த ராஜ்மாவில் 67% நீர், 23% கார்போஹைட்ரேட் , 9% புரதம் , மற்றும் மிகக் குறைவான கொழுப்பு, 532 kJ (127 kcal) உணவு ஆற்றலை வழங்குகிறது, ஃபோலேட் (33% DV), இரும்பு 20%, பாஸ்பரஸ் (20% DV), மிதமான அளவு (10-19% DV) தியமின் , தாமிரம் , மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் (11-14% DV) ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
பயன்கள்:
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுகிறது.
புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றது.
உங்களின் உடல் எடையை குறைய பயன்படுகிறது.
தினமும் இதனை ஒரு கைப்பிடி அளவு சாப்பிடுவதால் உங்களின் எலும்புகள் வலுப்பெறுகின்றது.
மங்குசுத்தான் பழம் பற்றி இருக்கும் தெரியாத சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |