கிணறு கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா..?

Advertisement

Kinaru Kanavu Palangal in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. நமது வலைத்தளத்தில் பலவகையான விஷயங்களை பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் நமது ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவுகளுக்கு என்ன பலன் என்று ஒவ்வொரு வகையான கனவுகளுக்கு என்ன பலன் என்று பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கிணறு கனவில் வந்தால் என்ன பலன் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

கிணறு என்பது, நிலத்தின் கீழ் நீர்ப்படுகைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒரு குழி ஆகும். அகழ்தல், தண்டு செலுத்தல், துளையிடல் போன்ற பல முறைகளைக் கையாண்டு கிணறுகள் வெட்டப்படுகின்றன. நிலத்தடி நீரின் மட்டத்தைப் பொறுத்து கிணற்றின் ஆழம் வேறுபடும். இத்தகைய கிணறை கனவில் கண்டால் என்ன பலன் என்று இப்பொழுது நாம் படித்தறிவோமா..

கிணறு கனவில் வந்தால்:Kinaru

  • பொதுவாக நீர் நிறைந்த கிணற்றை கனவில் காணப்பது மிகவும் நல்லது. கிணற்றை கனவில் கண்டால் திருணம் கை கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடுக்கும் என்று பொருள்.
  • நீங்கள் கிணற்றில் தண்ணீரை எடுப்பது போல் கனவு கண்டால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் கைகூடும்.
  • கிணற்றில் இறக்கி நீந்துவது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று முன்னேறி செலவீர்கள் என்று பொருள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?

  • கிணற்றில் தலையை யாரோ அழுத்துவது போல் கனவு கண்டால் அது நல்லதல்ல ஆக முடிவெடுப்பதில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
  • நீர் இல்லாத வெறும் கிணற்றை கனவில் கண்டால் செல்வ வளம் குறையும் என்று அர்த்தம் ஆகும்.
  • நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போது கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டிருந்தால் உங்கள் குடும்பத்தில் யாராவது இறக்க நேரிடலாம். அல்லது அதற்கு இணையான கஷ்டங்கள் ஏற்படும்.
  • நீங்கள் ஒரு கிணற்றை தோன்றுவது போல கனவு கண்டால் உங்களுக்கு செய்யும் காரியங்களில் வெற்றி உண்டு.
  • மற்றவருக்கு நீங்கள் கிணறு தோன்றி கொடுப்பது போல் கனவு கண்டால் உங்கள் திறமை மூலமாக இந்நிறுவர் அதிகம் பணம் சம்பாதிப்பார் என்று பொருள்.
  • கிணற்றில் தண்ணீர் பொங்கி வருவது போல கனவு கண்டால் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். மேலும் குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும்.
  • குழந்தை கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் சமீபத்தில் கிடைக்கும் அல்லது கிடைத்த வாய்ப்புகளை தவறலாம்.
  • குழந்தையை நீங்கள் கிணற்றில் போடுவது போலவும் பிறகு தூக்குவது போலவும் கனவு கண்டால் உங்கள் மனது அலைபாய்ந்துகொண்டு இருக்கிறது என்று அர்த்தம் ஆகும். ஆக செய்யும் செயலில் மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த கனவு மட்டும் உங்களுக்கு வந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement