கிரைய பத்திரம் என்றால் என்ன, அதில் கவனிக்க வேண்டியவை..

Advertisement

Kiraya Pathiram in Tamil

சொத்து வாங்குவதிலும் சரி, விற்பதிலும் சரி கவனமாக இருக்க வேண்டும், பத்திரம் என்பது சட்டப்பூர்வ ஆவணமாகும். ஒரு குறிப்பிட்ட நபர் அவருடைய சொத்துக்களை சட்டப்பூர்வமாக சில தனிப்பட்ட விவரங்களை அளித்து பெறக்கூடியது பத்திரம் ஆகும். இது சொத்தினை மற்றவருக்கு சட்டபூர்வமாக விற்பதற்கு உதவுகிறது.  இந்த பாத்திரத்தில் பல வகைகள் இருக்கிறது. நம்முடைய பதிவில் பத்திரம் சம்மந்தப்பட்ட பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கிரைய பத்திரம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

கிரைய பத்திரம் என்றால் என்ன:

ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தி சார்பதிவாளர் அலுவலகத்தில் தகுந்த சாட்சிகளின் முன்னிலையில் பதிவது தான் கிரைய பத்திரம் ஆகும்.

கிரைய பத்திரத்தில் கவனிக்க வேண்டியவை:

எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

தேர்தல் பத்திரம் என்றால் என்ன.?

கிரயம் எழுதிக்கொடுப்பவர், எழுதி வாங்குபவரிடம் கீழே உள்ள உறுதி மொழிகளை எடுக்க வேண்டும்:

  • தானம்
  • அடமானம்
  • முன் கிரயம்
  • முன் அக்ரிமெண்ட் (Agreement)
  • உயில்
  • செட்டில்மென்ட் (Settlement)
  • கோர்ட் அல்லது இணை பாதுகாப்பு செக்யூரிட்டி (collateral security)
  • ரெவின்யூ அட்டாச்மெண்ட் (Revenue attachment)
  • வாரிசு பின் தொடர்ச்சி
  • மைனர் வியாஜ்ஜியங்கள்(dispute)
  • பதிவு பெறாத பாத்திரங்கள் மூலம் எழுதும் பத்திர கோரல்கள்
  • சொத்து ஜப்தி
  • சொத்து ஜாமீன்
  • பைசலுக்கான சர்கார் கடன்கள்
  • வங்கி கடன்கள்
  • தனியார் கடன்கள்
  • சொத்து சம்மந்தப்பட்ட வாரிசு உரிமம்
  • சிவில், கிரிமினல் வழக்குகள்
  • சர்கார் நிலா ஆர்ஜிதம்
  • நிலக்கட்டுப்பாடு
  • அரசு நில எடுப்பது முன் மொழிவு நோட்டிஸ்
  • நிலா உச்ச வரம்பு கட்டுப்ப்பாடு
  • பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
  • மற்ற சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement