Kiwi Fruit in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதிகம் உள்ளார்கள். அதிலும் குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்தி கொண்டிருப்பவர்கள் அநேக பேர்கள் உள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக பலவகையான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
ஆனால் அவையாவும் முழுமையை அடைந்துள்ளதா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். உதாரணத்திற்கு நாம் அனைவரும் சாப்பிடும் உணவு பொருட்களை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு தெரிந்திருக்காது. அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் கிவி பழத்தின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
Kiwi Fruit Details in Tamil:
கிவி பழம் அல்லது சீன நெல்லிக்காய் என்பது ஆக்டினிடியா இனத்தில் உள்ள பல வகையான மரக் கொடிகளின் உண்ணக்கூடிய பெர்ரி வகை ஆகும்.
கிவி பழம் அல்லது பசலிப்பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் ஆகும். இதன் வடிவம் ஓவல் ஆகும்.
அதாவது இது ஒரு பெரிய கோழி முட்டையின் அளவு இருக்கும் 5–8 சென்டிமீட்டர் (2–3 அங்குலம்) நீளம் மற்றும் 4.5– 5.5 செமீ விட்டம் கொண்டது.
உளுந்தினை அதிக அளவு சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சிக்கணும்
பிறப்பிடம்:
கிவிப்பழம் மத்திய மற்றும் கிழக்கு சீனாவை பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் தற்பொழுது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது.
வேறுபெயர்கள்:
கிவி பழம் அல்லது பசலிப்பழம் என்று தமிழ் மொழியிலும், கிவிப்ரூட் ( Kiwi Fruit) என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் பச்சை கிவி பழத்தின் ஊட்டச்சத்து விவரம்:
- கலோரிகள் – 61
- கொழுப்பு – 0.5 கிராம்
- சோடியம் – 3மி.கி
- கார்போஹைட்ரேட்டுகள் – 15 கிராம்
- சர்க்கரை – 9 கிராம்
- நார்ச்சத்து உணவு – 3 கிராம்
- புரத – 1.1 கிராம்
பேஷன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் அதை பற்றி முழுதாக தெரிஞ்சிக்கோங்க
கிவி பழத்தின் பயன்கள்:
இந்த கிவி பழம் இரத்தம் உறைவதை தடுக்கும்.
இந்த பழம் முக்கியமாக இதய பிரச்சினையை தடுக்கும்.
உணவிற்கு பிறகு ஜீரண சக்திக்காக கிவி பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அதாவது இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் செரிமான திறனை மேம்படுத்துகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கவும் இந்த பழம் பெரும் பங்கு வகிக்கிறது.
உங்களுக்கு நெல்லிக்காய் பிடிக்குமா அப்போ இதை தெரிஞ்சிக்கமா இருந்தா எப்படி
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |