வரகு அரிசியை சாப்பிடுவதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளங்கள்..!

Advertisement

Kodo Millet in Tamil

நாம் அனைவரும் இன்றைய காலத்தில் உடலுக்கு நன்மை தரும் உணவுகளை விட Fast Food-ஐ தான் அதிகாமாக சாப்பிட்டு வருகிறோம். அதுமட்டும் இத்தகைய உணவுகளை எப்போதாவது ஒரு முறை மட்டும் சாப்பிடாமல் அனைத்து நேரத்திலும் சாப்பிடும் பழக்கத்தினையும் நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டோம். ஆனால் இதற்கு மாறாக நம் முன்னோர்கள் 9 வகையான திணைகளாக கருதப்பட்ட அரிசியில் இருந்து தான் ஒவ்வொரு வகையான உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்தார்கள். அதேபோல் அத்தகைய உணவுகள் அனைத்தும் உடலை நன்கு வலிமை பெற செய்யவும் மற்றும் ஆரோக்கியமாக இருக்க செய்தது. ஆனால் இன்றைய காலத்தில் இதுபோன்ற உணவுகளை சாப்பிடலாம் என்று நினைத்தாலும் கூட அதற்கான போதிய தகவல்கள் தெரியாமல் இருப்பதே ஒரு பிரச்சனையாக உள்ளது. அதனால் இன்று வரகு அரிசி பற்றிய தகவலை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

வரகு அரிசி பற்றிய தகவல்:

வரகு அரிசி

வரகு அரிசி ஆனது பாரம்பரிய திணை வகைகளில் ஒன்றாக உள்ளது. இதனை கோடா திணை என்றும் மற்றொரு பெயரிலும் அழைப்பார்கள்.

இதனுடைய இழையானது 20 செ.மீ முதல் 40 செ.மீ நீளம் வரை வெளிர் நிறத்தில் காணப்படும். மேலும் இதனை பயிர் செய்து அறுவடை செய்த பின்பு பார்த்தால் 1 ஹெக்டருக்கு தோராயமாக 450 முதல் 900 கிலோ வரையிலான வரகு அரிசியினை மகசூலாக பெற முடியும்.

மேலும் வரகு அரிசியின் தோற்றம் ஆனது 2 மி.மீ நீளத்துடனும், 1.5 மி.மீ அகலத்துடனும் இருக்கும். இத்தகைய வரகு அரிசி இந்தோனிசியா, தாய்லாந்து, இந்தியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பயிர்ப்படுகிறது.

பல நாடுகளில் இது பயிரிடப்பட்டாலும் கூட இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் தான் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

அதேபோல் வரகு அரிசி ஆனது காடும் காடு சார்ந்த இடத்தில் தான் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது.

  1. குடும்பம்: பொவேசி (Poaceae)
  2. துணை குடும்பம்: Panicoideae
  3. இனம்: பி. ஸ்க்ரோபிகுலேட்டம்
  4. ஆங்கிலப்பெயர்: Kodo Millet
  5. பேரினம்: பாஸ்பாலம்
  6. தாவரம்: திணை
தினை வகைகள் மற்றும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா 

வரகு அரிசியில் உள்ள சத்துக்கள்:

 information about kodo millet in tamil

  • வைட்டமின் B
  • கால்சியம்
  • பாஸ்பரஸ்
  • புரதச்சத்து
  • இரும்புச்சத்து
  • கொழுப்பு
  • நீர்ச்சத்து
  • சர்க்கரை
  • சுண்ணாம்புச்சத்து
  • தாது உப்பு

மேலே சொல்லப்பட்டுள்ள சத்துக்கள் அனைத்தும் வரகு அரிசியில் நிறைந்து இருக்கிறது.

வரகு அரிசி சாப்பிட வேண்டியவர்கள்:

  • சீரான இதய ஆரோக்கியம் உள்ளவர்கள்
  • அதிக உடல் எடை உள்ளவர்கள்
  • மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள்
  • குடல் புண் உள்ளவர்கள்
  • ஆண்மை குறைபாடு உள்ளவர்கள்

வரகு அரிசி சாப்பிடக்கூடாதவர்கள்:

  • உடல் எடை குறைவாக உள்ளவர்கள்
  • சர்க்கரை நோயாளிகள்
  • தோல் ரீதியான பிரச்சனை உள்ளவர்கள்
  • கர்ப்பிணி பெண்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் யாராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை படி சரியான அளவில் வரகு அரிசியினை எடுத்துகொள்ள வேண்டும்.

வரகு அரிசி தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement