கோவில் Vs கோயில்..! இதில் எது சரி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

கோவில் கோயில் எது சரி

வாசகர்களுக்கு வணக்கம்..! நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பொதுவாக நாம் ஒரு சில வார்த்தைகளை இரண்டு விதமாக கூறுவோம். அதாவது ஐயர் – அய்யர், எமன் – யமன், பவளம் – பவழம் என்று. அதில் ஓன்று தான் கோவில். நம்மில் சிலர் கோவில் என்று சொல்வார்கள். சிலர் கோயில் என்று சொல்வார்கள். ஆனால் இதில் எது சரி என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் நம் பதிவில் கோவில் – கோயில் உச்சரிக்க எது சரி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கோவில் கோயில் எப்படி சொல்வது சரி..? 

பழங்காலத்தில் இருந்து இறைவன் இருக்கும் இடத்தை கோவில் என்று சொல்லி வருகிறோம். ஆனால் அதையும் பலர் கோயில் என்று தவறாக சொல்கிறார்கள். ஆனால் எது சரி எது தவறு என்று நம்மில் பலருக்கும் தெரியவில்லை.

அதனால் அதை நாம் இலக்கண வரிசையில் எது சரி என்று காண்போம்.

ஒரு சொல்லின் முன் பகுதியை “நிலைமொழி’ என்றும், அதன்பின் பகுதியை “வருமொழி” என்றும் சொல்வோம். நிலைமொழி ஈற்று என்பது அதன் கடைசி எழுத்தாகும். ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்றும், வருமொழி முதலும் இணைவதே “புணர்ச்சி” எனப்படும்.

அதுவே ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் மட்டும் ஒன்றுடன் ஒன்று இணையாது. இதற்கு, நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் இணைவதற்கு உடம்படுமெய் எனப்படும் “வ்” மற்றும் “ய்” என்னும் மெய்கள் தேவை. இவை தான் உடம்படுமெய் என்று அழைக்கப்படுகின்றன.

இன்பம்-மகிழ்ச்சி-சந்தோஷம் மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா

அதேபோல அ, ஆ, உ, ஊ, ஓ என்னும் உயிரொலிகளுள், ஏதாவது ஒன்று நிலைமொழியின் கடைசியில் வந்தால், வருமொழியின் முதலில் 12 உயிரெழுத்துகளில் எது வந்தாலும் அதில் வகர மெய் தோன்றும்.

அதாவது கோ+இல் என்பது புணர்ச்சியில், கோ+வ்+இல் என்று வகர உடம்படுமெய்யை (வ்) பெற்று கோவில் என்றானது.

எனவே கோவில் என்பது தான் உச்சரிக்க சரியான விடையாகும். ஆனால் கோயில் என்பது இறைவன் இருக்கும் கருவறை என்றும் கோவில் என்பது கோபுரமும் மதிலும் கொண்ட பரப்பு என்றும் பொருள் தருகிறது.

ஆனால் இலக்கணப்படி கோவில் என்பது தான் சரியான விடையாகும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement