கோவிலில் திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள் | கோவிலில் திருமணம் செய்வது எப்படி | Kovilil Thirumanam Seivathu Eppadi Tamil
பொதுவாக திருமணம் மண்டபம் மற்றும் கோவில்களில் நடத்துவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. மண்டபத்தில் திருமணம் செய்தால் பெற்றோர்கள் முறைப்படி நடக்கும். மேலும் அதற்கு பதிவு திருமணம் செய்ய வேண்டும் என்றுதெரியும் . சில பேர் கோவிலில் திருமணத்தை செய்து விட்டு மண்டபத்தில் உணவு மற்றும் கிப்ட் கொடுப்பதற்காக வைப்பார்கள். கோவிலில் திருமணம் செய்பவர்கள் இரண்டு விதமாக இருப்பார்கள்.
ஒன்று பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்பவர்கள் மற்றவர்கள் காதல் திருமணம் செய்பவர்கள் என்று இரண்டு வகைகளாக இருப்பார்கள். இதில் கோவிலில் திருமணம் செய்வது எப்படி, அதற்கு தேவையான ஆவணங்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
கோவிலில் திருமணம் செய்வதற்கான சட்ட பூர்வ விதிகள்:
☑ இந்தியாவில் செய்யப்படும் கோவில்களில் செய்யும் திருமணமானது மத அடிப்படையில் வெவ்வேறு சட்டங்கள் இருக்கிறது. அதனை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
☑ மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்.
☑ மணமகனுக்கு 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், மணமகளுக்கு 18வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
☑ மற்றவர்களின் வற்புறுத்தல் இல்லாமல் அவர்களே திருமணத்திற்கு சம்மதித்தாக இருத்தல் வேண்டும்.
☑ மணமகன் மற்றும் மணமகள் பாரம்பரியமான திருமண உடை அணிய வேண்டும். பொதுவாக மணமகன் வெள்ளை அல்லது பட்டு வேட்டி , மணமகள் பட்டு புடவை அணிய வேண்டும்.
☑ இந்த திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும்.
☑ கோவிலில் திருமணம் செய்வதற்கு அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த கட்டணமானது கோவிலுக்கு கோவில் மாறுபடும்.
கோயிலில் இருந்து திருமண சான்றிதழ்:
- இன்று பல கோயில்கள் திருமணம் நடந்து முடிந்த பிறகு அதற்கான சான்றுகள் வழங்கப்படுகிறது.
- கோவில்களில் திருமணம் நடக்கும் போது அதனை வீடியோ அல்லது போட்டோ போன்றவை எடுக்க வேண்டும். இவை பதவி செய்வதற்கு உதவியாக இருக்கும். ஏனென்றால் அங்கு ஆதாரம் கேட்பார்கள்.
- திருமணத்தில் இரண்டு நபர்கள் தரப்பிலும் 2 சாட்சிகள் இருக்க வேண்டும்.
கோவிலில் திருமணம் செய்ய தேவையான ஆவணங்கள்:
✔ பிரபு சான்றிதழ்
✔ அடையாள சான்றிதழ்
✔ முகவரி சான்றிதழ்
✔ திருமணம் செய்யாதது குறித்த சான்றிதழ்
✔ சாதி சான்றிதழ்
✔ புகைப்படம்
✔ திருமணம் பதிவு படிவம்
✔ நீங்கள் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவராக இருந்தால் அதற்கான Divorce சான்றிதழ்
கோவில் அனுமதி
பதிவு திருமணம் செய்ய விதிமுறை மற்றும் தேவையான ஆவணங்கள்
கோவிலில் திருமணம் செய்வது எப்படி.?
- முதலில் திருமண தேதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு எந்த கோவிலில் திருமணம் நடக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து அந்த கோவில் நிர்வாகத்திடம் உங்களின் தேதி கூறி நேரத்தை தீர்மானித்து கொள்ள வேண்டும்.
- மேல் கூறியுள்ள ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
- உங்களது திருமணம் ஆனது கணேஷ பூஜை, மாங்கல்ய தாரணம், ஹோமம் போன்றவை செய்யப்படும்.
- திருமணம் முடிந்த பிறகு சட்டபூர்வமாக பதவி செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் அலுவலகத்தில் திருமண பதவி சான்றிதழ் வாங்க வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |