கிருஷ்ண ஜெயந்தி 2023 எப்போது தெரியுமா..?

Advertisement

Krishna Jayanthi 2023 

பொதுவாக ஒவ்வொரு மதத்தினருக்கும் பண்டிகை நாட்கள் என்பது இருக்கும். அப்படி பார்த்தால் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு விதமாக தான் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்துக்களின் பண்டிகை என்பது ஒரு வருடத்திற்கு நிறையவே இருக்கிறது. இவ்வாறு நிறைய பண்டிகைகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டும், வித்தியாசமாகவும் தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தி என்பது வரும். ஆனால் கிருஷ்ண ஜெயந்தி எப்போதும் ஒரே தேதியில் வருவது இல்லை. அதனால் இன்று 2023-ஆம் ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி எப்போது என்று, அதாவது தேதி மற்றும் நேரம் பற்றி பார்க்கலாம் வாங்க..!

கிருஷ்ண ஜெயந்தி 2023:

நாம் அனைவரும் கிருஷ்ண பகவானை பற்றி அறிந்து இருப்போம். அந்த வகையில் பார்த்தால் கிருஷ்ணின் அவதாரம் என்பது மொத்தம் 10 ஆகும். இத்தகைய 10 அவதாரங்களில் 9-வது அவதாரமாக கிருஷ்ணன் அவதரித்தது தான் கிருஷ்ண அவதாரம். இத்தகைய அவதாரத்தை தான் நாம் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடி வருகிறோம்.

அந்த வகையில் கிருஷ்ணன் 9-வது அவதாரத்தை ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தான் அவதரித்தார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கூட கம்சன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்யவே கிருஷ்ணர் அவதரித்ததாக கூறப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி தேதி மற்றும் நேரம்:

2023 ஆம் ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி ஆனது செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தேய்பிறை அஷ்டமி அன்று புதன்கிழமை வருகிறது.

மேலும் இதற்கான திதி நேரம் என்பது செப்டம்பர் 6 இரவு 09:13 PM முதல் மறுநாள் செப்டம்பர் 7 இரவு 09:14 PM வரை இருக்கிறது.

கிருஷ்ண ஜெயந்தி ரோகிணி நட்சத்திரத்தில் செப்டம்பர் 6 மாலை 03:24 PM தொடங்கி மறுநாள் செப்டம்பர் மாதம் 7 மாலை 03:23 PM அன்று முடிவடைகிறது.

எனவே செப்டம்பர் 6-ஆம் தேதியே பூஜைக்கான சரியான நேரம் ஆகும். தமிழ்நாட்டில் இவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ள கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் அழைத்து வருகிறார்கள்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement