குடியரசு தின பேச்சு போட்டி தலைப்புகள்
வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும் நமது நாட்டின் சிறப்பை போற்றும் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இந்திய குடியரசு தினம் திகழ்கிறது. ஒரு காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் மன்னராட்சி முறை இருந்தது. அதாவது மன்னர் இறந்த பிறகு அவருக்கு மகனாக இருக்கும் இளவரசன் மன்னர் ஆக பொறுப்பேற்று ஆட்சி நடத்துவது. இந்த மன்னர் ஆட்சி முறையில் பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே மக்களை ஆட்சி செய்யும். இத்தகைய மன்னர் ஆட்சி முறைக்கு மாற்றாக மிக சமீப நூற்றாண்டுகளில் உருவான ஆட்சி முறை தான் “குடியரசு ஆட்சி” முறையாகும்.
பொதுவாக குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் பள்ளி கல்லூரிகள் தான் கோலாகலமாக இருக்கும். ஏனென்றால் இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளில் கொடி ஏற்றி பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி வைப்பார்கள். இந்த போட்டிகளுக்கு என்ன தலைப்புகள் எடுப்பது என்று தெரியாது. அதனால் தான் இந்த பதவில் குடியரசு தின பேச்சு போட்டி தலைப்புகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Kudiyarasu dhinam speech headlines for students
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26,ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தின பேச்சு போட்டிக்கு, குடியரசு தினத்தின் முக்கியத்துவம், இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றைப் பற்றிய தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால் பலருக்கும் குழப்பம் இருக்கும் என்ன தலைப்பு எடுப்பது என்று அவர்களுக்கும் உதவும் வகையிலும், ஈசியான வகையிலும் காண்போம் வாங்க..
இந்தியாவின் பன்முகத்தன்மை:
நம் நாடானது அடிப்படையில் மத சார்பற்ற நாடக விளங்குகிறது. பல்வேறு மதம், இனம், மரபுகள் கலாசாரத்தை போற்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நம் நாட்டின் பன்முகத்தன்மையை பற்றி பேசலாம்.
தியாகிகளின் கதைகள்:
நம் நாட்டிற்காக போராடி உயிரை விட்ட தியாகிகளின் வாழ்க்கையை பற்றி பேசலாம்.
தேசிய சின்னங்கள்:
நம் நாட்டின் பெருமைக்கு அடையாளமாக விளங்கும் தேசிய சின்னங்களின் உருவான கதைகள் பேசலாம்.
இந்தியாவின் உலகளாவிய பண்பு:
சர்வதேச நாடுகளுடன் நம் நாடு உறவு முறை, அமைதி போன்ற உலகளாவிய பிரச்சனைகளை எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை பற்றி பேசலாம்.
குடியரசு தின அணிவகுப்பின் முதல் தலைமை விருந்தினர்..!
ராணுவ வீரர்கள்:
நாட் நாட்டின் பாதுகாப்பிற்காக இன்று வரையிலும் போராடும் ராணுவ வீரர்களை பற்றி பேசலாம்.
எதிர்கால வாழ்க்கை:
நாட் நாட்டின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி நீங்கள் பேசலாம்.
டிஜிட்டல் இந்தியா:
நம் நாடானது டிவிட்டால் இந்தியாவாக மாறி கொண்டே இருக்கிறது. இதில் நீங்கள் தொழிநுட்பத்தின் வளர்ச்சியை பற்றி பேசலாம்.
அரசிலையமைப்பின் முக்கியத்துவம்:
இந்திய அரசிலையமைப்பு சட்டத்தின் அடிப்படை கொள்கைகள் பற்றி பேசலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |