வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குடியரசு தின சிறப்புகள்.! | Kudiyarasu Thina Special in Tamil

Updated On: January 21, 2025 1:12 PM
Follow Us:
Republic Day Special in Tamil
---Advertisement---
Advertisement

Republic Day Special in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குடியரசு தின சிறப்புகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2025 குடியரசு தினம் ஞாயிற்றுகிழமை அன்று வருகிறது. இந்த ஆண்டு 76 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது.

குடியரசு தினம் பற்றிய சில விவரங்களை நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.  இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், குடியரசு தினத்தின் சிறப்புகள் என்ன என்பதை இந்த பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்த்துக்கொள்ளலாம்.

குடியரசு தின அணிவகுப்பின் முதல் தலைமை விருந்தினர்..!

குடியரசு தின சிறப்புகள்:

குடியரசு தின சிறப்புகள்

  • இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • 1950 ஆம் ஆண்டில் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதனை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. ஆனால், அதற்கு முன்பாக இருந்தே, இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்ட்டதை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.
  • 2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களாக இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளை தாம், நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.
  • இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தும் விதமாக நாடு முழுவதும்கலாச்சார நிகழ்வுகள்  நடத்தப்படுகின்றன.
  • பள்ளி, கல்லூரிகள், அரசியல் கட்சி இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியரசு தினத்தன்று கோடி ஏற்றி நாட்டு பற்றை வெளிப்படுவார்கள்.
  • இந்தியாவின் படைபலத்தை உலகிற்கு தெரிவிக்கும் வகையில், ராணுவ அணி வகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும்.
  • மாநிலம் முழுவதும், அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவார்கள்.
  • இதற்கு முன்னதாக, குடியரசு தலைவர் டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார். மேலும், இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக முப்படை அணிவகுப்புடன் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும்.
  • இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாச்சார வாகன ஊர்திகள் இடம்பெறும்.
  • இந்நிகழ்வில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதைத் தொடர்ந்து 21 துப்பாக்கி வணக்கம், தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் தேசிய கீதம் பாடுதல் நடைபெறும்.  மேலும் பரம்வீர் சக்ரா, அசோக் சக்ரா மற்றும் வீர் சக்ரா ஆகிய வடிவங்களில் வீரமிக்க வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • டெல்லியில் நடைபெறும், நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர் கலந்து கொள்வார்கள். இவர்கள் பெரும்பாலும், உலக நாடுகளின் பிரதமர் அல்லது அதிபராக இருப்பார்கள்.

குடியரசு தினம் கொடி ஏற்றும் முறை..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now