Kurothi Varudam Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Kurothi Varudam Meaning in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. சோபகிருது வருடம் முடிந்து தற்போது குரோதி வருடம் பிறக்க இருக்கிறது. ஒவ்வொரு தமிழ் வருடமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது, தமிழ் வருடங்களில் மொத்தம் 60 வருடங்கள் உள்ளது. இந்த 60 அறுபது வருடங்களும், ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கும். அந்த வகையில் இப்பதிவில் குரோதி வருடம் என்றால் என்ன.? இந்த குரோதி வருடம் எப்படி இருக்கும்.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14, 2024 அன்று பிறக்க இருக்கிறது. தமிழ் வருடங்களில் 38 -வது குரோதி வருடம் ஆகும். குரோதி வருடம் பற்றி சித்தர்கள், பஞ்சாகத்திலும் வெண்பா பாடலிலும் பதிவிட்டுள்ளார்கள். எனவே, இந்த குரோதி வருடம் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குரோதி பொருள்:
குரோதி என்றால் கோரமான, பகை, கேடு என்று பொருள். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், குரோதி வருடம் என்பது மோசமான வருடம் ஆகும்.
குரோதி வருடம் என்றால் என்ன.?
தமிழ் பஞ்சாங்கத்தில் மொத்தம் 60 வருடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த 60 வருடங்களில் 38 வது வருடமாக வரக்கூடியது தான் குரோதி வருடம். குரோதி வருடம் ஏப்ரல் 14,2024 அன்று பிறக்கபோகிறது. குரோதி வருடம் குறித்து வெண்பாவில் கொடுக்கப்பட்டுள்ளது. குரோதி வருடம் குறித்து எப்படி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
குரோதி என்றால் கோரமான, பகை, கேடு என்று பொருள். குரோதி தமிழ் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 38வது ஆண்டாகும். இந்த ஆண்டில் கொலை, கொள்ளை, திருட்டு, பகை பெருகும் என்று கூறப்படுகிறது.
- குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி (சித்திரை 1) பிறக்கிறது.
- வளர்பிறை சஷ்டி திதியில், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, அதிகண்ட யோகம், தைதுளை கரணத்தில் பிறக்கும் குரோதி தமிழ் வருடம்.
- குரோதி வருடத்தில் என்ன நடக்கும் என்பதை வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.
குரோதி வருட வெண்பா:
கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் – கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்.
குரோதி வருடம் விளக்கம்:
குரோதி தமிழ் ஆண்டு கோரமான ஆண்டு ஆகும். உலகில், எங்கும் கொள்ளை, களவு மற்றும் பகை போன்றவை பெருகும். திருடர்கள் புழக்கமாக இருக்கும். திருடர்கள் மக்களை தாக்கி அளிப்பார்கள். இதனால், மக்களிடையே திருடர்கள் பற்றிய பயம் மிகுதியாக இருக்கும். தேவையான போது மழை பெய்யாமல் இருக்கும். இதனால், பஞ்சம் ஏற்படும். பயிர்கள் அழிந்துபோகும்.குரோதி வருடம் எப்படி இருக்கும்:
குரோதி வருடம் |
|
தேவதை | அஜராபிரபு |
ராஜா | செவ்வாய் |
மந்திரி | சனி |
சேனாதிபதி, அர்க்காதிபதி | சுக்கிரன் |
ரஸாதிபதி | குரு |
தானியாதிபதி | சூரியன் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |