குதிரை கனவில் கண்டால் என்ன பலன் | Kuthirai Kanavu Palangal in Tamil
Kuthirai Kanavil Vanthal Palan: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் உங்களுடைய கனவில் குதிரை வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளுவோம்..! அனைவருக்கும் இரவில் கனவுகள் தோன்றுவது இயல்புதான். ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. எங்கள் பொதுநலம் பதிவில் விலங்குகள் பற்றிய கனவு பலன்கள், பறவை, திருமணம், கோவில் பற்றிய பல கனவு பலன்களை பதிவு செய்துள்ளோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் கனவில் குதிரையை கண்டால் என்ன பலன் என்று இப்போது நீங்களும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன் |
கனவில் நீங்கள் குதிரையை பார்த்தால் என்ன பலன்:
குதிரையை கனவில் நீங்கள் பார்த்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு நடப்பவை அனைத்தும் சரியாக நடக்கும் என்பதைக் குறிக்கிறது. உங்களுக்கு பெரிதாக எந்த பிரச்சனையும் ஏற்படாது.
குதிரைகள் நிறைய இருப்பது போன்று கனவில் வந்தால்:
உங்களுடைய கனவில் நிறைய குதிரைகள் இருப்பது போன்று வந்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு அதிகரித்து காணப்படும்.
குதிரை ஓடுவது போல் கனவில் வந்தால் என்ன பலன்:
குதிரை கனவில் ஓடுவது போல் வந்தால் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இந்த கனவு மூலம் நமக்கு உணர்த்துகிறது.
குதிரை மீது சவாரி செய்வது போல் வந்தால் என்ன அர்த்தம்:
கனவில் நீங்கள் குதிரை மீது சவாரி செய்வது போல் கண்டால் மற்றவர்களிடம் அதிகமாக புகழ், செல்வம் அனைத்தையும் அடைவீர்கள்.
பசுவை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா..! |
குதிரை வண்டி பற்றி கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் குதிரை வண்டி பற்றி வந்தால் நல்ல செய்தியை குறிக்கிறது.
குதிரையின் வண்டியில் ஒரு துணி இருப்பதை நீங்கள் கனவில் கண்டால் அது இன்னும் அதிக நன்மைகளை உங்களுக்கு கொடுக்கப்போகிறது என்று அர்த்தம்.
பெண் குதிரையில் சவாரி செய்வது போல் கனவு வந்தால் என்ன பலன்:
கனவில் விவாகரத்து பெற்ற பெண் குதிரை மீது சவாரி செய்வது போல் கண்டால் கூடிய விரைவில் உங்களுக்கு மறுமணம் ஆகப்போகிறது என்று இந்த கனவானது நமக்கு உணர்த்துகிறது.
குதிரையின் பின் சவாரி செய்வது போல் வந்தால் என்ன பலன்:
கனவில் குதிரை பின்னோக்கி சவாரி செய்வது போல கண்டால் உங்களுக்கு தவறான சம்பவங்கள் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
குதிரையிலிருந்து விழுவது போன்று கனவில் வந்தால் என்ன அர்த்தம்:
உங்களுடைய கனவில் குதிரையிலிருந்து கீழே விழுவது போல கனவு வந்தால் நீங்கள் வேலை செய்யும் இடங்களில் ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்று நமக்கு தெரியப்படுத்துகிறது.
கனவில் குதிரை உதைப்பது போல் கண்டால் என்ன பலன்:
குதிரை உங்களை உதைப்பது போல் கனவில் கண்டால் மனதில் நீங்கள் அதிகம் விரும்பக்கூடிய நபரால் ஒதுக்கிவைக்கப்படுவீர்கள் என்று அர்த்தமாகும். இதுமட்டுமல்லாமல் உடல்நலனில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
கனவில் நீங்கள் குதிரையால் கடிக்கப்படுவது போல் வந்தால் என்ன பலன்:
ஒரு குதிரையால் கனவில் நீங்கள் கடிக்கப்படுவது போல் கனவில் கண்டால் பணியிடத்தில் உங்களுக்கு கூடிய விரைவில் பதவி உயர்வு கிடைக்க போகிறது என்று அர்த்தம்.
குதிரையை கனவில் பின்தொடர்வது போல் கண்டால் என்ன அர்த்தம்:
கனவில் குதிரையை பின்தொடர்ந்து போவது போல் கனவில் கண்டால் கூடிய விரைவில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய செயல்கள் நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
கனவில் குதிரையை வாங்குவதோ அல்லது விற்பனை செய்வது போலவோ கண்டால் என்ன பலன்:
குதிரையை வாங்குவது போலவோ அல்லது விற்பனை செய்வது போலவோ கனவு கண்டால் நீங்கள் மிகவும் நம்பிக்கை வைத்த நபர்கள் உங்களை ஏமாற்றலாம் என்பதை இருக்கிறது.
கனவில் குதிரைக்கு உணவளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
குதிரைக்கு உணவளிப்பது போன்று கனவு கண்டால் கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு வரப்போகிறது என்று அர்த்தமாகும். அந்த வாய்ப்பினை தவறவிடாமல் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
கனவில் குதிரையை தாக்குவது போல் கண்டால் என்ன பலன்:
குதிரையை கனவில் தாக்குவது போல் கண்டால் பணியிடத்தில் சில பிரச்சனைகள் ஏற்படப்போகிறதை குறிக்கிறது.
குதிரை சிறகுடன் இருப்பது போல் கண்டால் என்ன பலன்:
கனவில் குதிரை சிறகுடன் இருப்பது போல் கண்டால் நீங்கள் செய்கின்ற செயல்களில் நல்ல வளர்ச்சியும, முன்னேற்றமும் அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
காயமடைந்த குதிரை கனவில் வந்தால் என்ன அர்த்தம்:
கனவில் குதிரை காயமடைந்து இருப்பது போல் கண்டால் உங்களுடைய நண்பர் ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டப்போகிறார் என்று இந்த கனவு உணர்த்துகிறது.
இறந்த குதிரை கனவில் கண்டால் என்ன பலன்:
கனவில் இறந்த குதிரையை கண்டால் உங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
வெள்ளை குதிரை கனவில் கண்டால் என்ன பலன்:
கனவில் வெள்ளை குதிரையை கண்டால் நீங்கள் செய்யும் வேலையில் தோல்வி நீங்கி நல்ல வெற்றி கிடைக்கும் என்பதை குறிக்கிறது. மேலும் ஒரு அழகான பெண்ணுடன் நல்ல உறவு ஏற்படும் என்பதையும் குறிக்கிறது.
அழுக்காக மெலிந்து இருக்கக்கூடிய குதிரை கனவில் கண்டால் என்ன பலன்:
ஒல்லியாக மற்றும் அசுத்தமான குதிரையை உங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு நெருங்கியவர்கள் மற்றும் நண்பர் உங்களுக்கு துரோகம் செய்வார் என்பதை குறிக்கிறது.
அடர்ந்து இருண்டு இருக்கக்கூடிய குதிரை கனவில் கண்டால் என்ன பலன்:
பருமனான மற்றும் இருந்து இருக்கக்கூடிய குதிரை உங்கள் கனவில் வந்தால் உங்களது துன்பம் நீங்கி சந்தோசமான நிகழ்வு நடக்கும் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புள்ளது.
காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா..?
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |