உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்..! KVP Post Office Scheme..! 1 லட்சம் முதலீட்டிற்கு..! 1 லட்சம் வட்டி..!

Advertisement

அஞ்சல் துறையின் கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டம்..! Kisan Vikas Patra Scheme Post Office..!

KVP Post Office Scheme in Tamil:- பொதுவாக நம்பில் பலர் நமது எதிர்கால பயன்பாட்டிற்காக நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவினை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம். பணத்தை சேமிப்பதற்கு வங்கிகளை நாடுவதற்கு பதில், வங்கிகளை விட அதிக வட்டி மற்றும் அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பல இருக்கின்ற. அவற்றில் ஏதாவது ஒரு திட்டத்தில் இணைந்து தாங்கள் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டி மற்றும் அதிக லாபம் பெற முடியும். அந்த வகையில் இப்பொழுது நாம் தபால் துறை சேமிப்பு திட்டத்தில் மிகவும் சிறந்த திட்டமான கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டத்தை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் தாங்கள் முதலீடும் செய்யும் தொகையினை இருமடங்கு இரட்டிப்பாக்கலாம்.

சரி வாங்க இந்த பதிவில் தபால் துறையின் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தை (KVP Post Office Scheme in Tamil) பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தபால் அலுவலகத்தில் உள்ள 9 அற்புதமான சேமிப்பு திட்டங்கள்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்..! KVP Post Office Scheme in Tamil..!

kisan vikas patra scheme post office

தபால் துறையின் கிசான் விகாஸ் பத்ரா யாரெல்லாம் இணையலாம்?

இந்த கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் தனிநபராகவோ அல்லது ஜாயிண்டு அக்கௌன்ட் ஆகவும் இந்த திட்டத்தில் இணையலாம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தபால் துறைகளிலும் இந்த கணக்கினை தாங்கள் திறக்க முடியும்.

முதலீடு தொகை:-

இந்த கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு (kvp post office scheme in tamil) திட்டத்தில் தாங்கள்  குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகை என்று எந்த வரம்பும் இல்லை. தாங்கள் எவ்வளவு தொகையினை முதலீடு செய்கிறீர்களோ இந்த முதலீடு தொகையினை இந்த திட்டத்தில் இரண்டு மடங்காக மாற்ற முடியும். இதுவே இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

முதிர்வு காலம்:-

இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் முதிர்வு காலம் 124 மாதங்கள் ஆகும். ஆதாவது 10 ஆண்டுகள் 4 மாதம் ஆகும். இந்த முதிர்வு காலம் முடிவடைந்த பிறகு தங்களுடைய முதலீட்டு தொகையினை திரும்ப பெறமுடியும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

வட்டி விகிதம்:

பொதுவாக இந்த kisan vikas patra scheme in tamil திட்டத்திற்கு தபால் துறை 6.9% வட்டி விகிதம் அளிக்கின்றது. இந்த திட்டத்தின் ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் பெறும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

நாம் முதலீடு செய்யும் பணத்தை எப்பொழுது திரும்ப பெறலாம் ?

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் தாங்கள் இணைந்தவுடன் தங்களுக்கு ஒரு பாஸ்புக்  வழங்கப்படும். அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் இப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். சான்றிதழை ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கும், ஒரு அஞ்சல் அலுவலக கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கும் மாற்றிக்கொள்ளலாம்.

கிசான் விகாஸ் பத்ரா பாஸ்புக் வழங்கப்பட்ட தேதியில் இருந்து இரண்டரை ஆண்டுகள் (30 மாதங்கள்) முடிந்தவுடன் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இறுதிப் பணத்தை எடுக்கும் வரை மெச்சூரிட்டி மூலம் வட்டி உயர்ந்துகொண்டே இருக்கும்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement