Laptop Buying Guide in Tamil
நீங்க ஒருத்தி புது லேப்டாப் வாங்க போறீங்களா, அப்போ என்னென்ன விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று தெரியுமா? அதற்கான பதிவு தான் இது. அதாவது ஒரு புதிய லேப்டாப் வாங்குவதற்கு முன்பு, நாம் என்னவெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை குறித்த விவரங்களை பற்றி இப்பொழுது நாம் அறியலாம் வாங்க.
No: 1
ஒரு லேப்டாப் வாங்குவதற்கு முன்பு நாம் என்ன பயன்பாட்டிற்கு வாங்கப்போறிங்கனு தெரிஞ்சிக்க வேண்டும். ஆக நீங்க அந்த லேப்டாப்பில் என்ன ஒர்க் பண்ணபோறீங்கன்னு, பகுப்பாய்வு செய்தால் மொத்தமாக இரண்டு டைப் லேப்டாப் பயனர்கள் தான் இருப்பாங்க.
அவற்றில் முதல் டைப் யாருக்கெல்லாம் பயன்படும் என்றால் Word Excel, Internal Browning, Movies, Online Class போன்றவற்றிற்கு பயன்படுத்துபவர்கள் அனைவருமே முதல் டைப் என்று சொல்லலாம்.
Photo Editor, Video Editor, Gamers, Software Developers இவர்களையெல்லாம் இரண்டாவது டைப் என்று சொல்லலாம்.
No: 2
இரண்டாவது நாம் கவனிக்க வேண்டியது நமது லேப்டாப்பில் உள்ள Processor, இந்தியாவில் டாப் 2 processor Brands இருக்காங்க. ஒன்று intel, மற்றொன்று AMD ஆகும். இவற்றில் விலை நிலவரத்தை பொறுத்தவரை intel-ஐ விட AMD குறைந்தவிலையில் கிடைக்கிறது. இருந்தாலும் அதிகமாக மக்கள் வாங்குவது intel-ஐ தான்.
இந்த intel Processor-யில் i3, i5, i7, i9 வரைக்கும் Core இருக்கிறது. இந்த ஒவ்வொரு Core-ம் 12 Generation இருக்கிறதாம். தற்பொழுது லேட்டஸ்ட் ஆக i13 Generation-ம் வந்துள்ளது.
இவற்றில் நீங்கள் முதல் டைப் பயனராக இருந்தால் i10 Generation Processor அல்லது அதற்கு மேல் இருக்கும் Processor-ஐ வாங்கலாம். அதுவே இரண்டாவது டைப் என்றால் 12th Generation Processor அல்லது அதற்கு மேல் இருக்கும் Processor-ஐ வாங்கலாம்.
No: 3
மூன்றாவதாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் Storage Drive-ஐ தான். முன்பெல்லாம் லேப்டாப்-யில் Hard Disk Drive-ஐ தான் பயன்படுத்தி இருந்தாங்க. ஆனா இப்போல்லாம் Solid State Drive-ஐ தான் பயன்படுத்துறாங்கள். இந்த HDD-ஐ விட SSD நன்கு வேகமாக செயல்படுகிறது என்று சொல்லலாம்.
ஆக முதல் டைப் பயனராக இருந்தால் உங்களுக்கு என்ன அளவில் SSD வேண்டும் என்பதை மட்டும் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதுவே இரண்டாவது டைப் பயணராக இருந்தால் உங்களுக்கு SSD பயனளிக்காது, NVMe தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
No: 4
அடுத்து நாம் மிகவும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியாது RAM நாம் பயன்படுத்தும் மடிக்கணினியில் வேகமானது 50 சதவீதம் RAM-ஐ நம்பி தான் இருக்கிறது. ஆக முதல் டைப் யூசராக இருந்தால் குறைந்தபட்சம் 4GB முதல் 8GB RAM இருக்கும் லேப்டாப்பை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது. அதுவே இரண்டாவது டைப் யூசராக இருந்தால் குறைந்தபட்சம் 8 GB முதல் 16 GB உள்ள லேப்டாப்பை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.
No: 5
அடுத்ததாக தெரிந்துகொள்ள வேண்டியது Graphics Cards. இவற்றில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று Integrated மற்றொன்று Dedicated.
இந்த Integrated Graphics Cards-யில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் ஒரு 8GB RAM கொண்ட லேப்டாப்பில் 2GB-யினை இந்த Integrated Graphics Cards-கே போய்விடு. மின்தம் உங்கள் லேப்டாப்பில் 6GB RAM தான் இருக்கும். ஆக உங்கள் லேப்டாப்பில் வேகம் குறைந்துவிடும்.
முதல் டைப் யூசராக இருந்தால் பிரச்சனை இருக்காது, அதுவே இரண்டாவது டைப் யூசராக இருந்தால் உங்களுக்கு பிரச்சனை கொடுக்கும், ஆக நீங்கள் Dedicated Graphics Cards-ஐ தான் வாங்க வேண்டும்.
No: 6
லேப்டாப் டிஸ்ப்ளே பொறுத்தவரை முதல் டைப் பயனராக இருந்தால் குறைந்தபட்சம் 14 இன்ச் டிஸ்ப்ளே உள்ள லேப்டாப்பை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.
இரண்டாவது டைப் பயனராக இருந்தால் குறைந்தபட்சம் 15 இன்ச் டிஸ்ப்ளே உள்ள லேப்டாப்பை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது. மேலும் IPS டிஸ்ப்ளே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உங்களிடம் கூடுதலாக பணம் இருக்கிறது என்றால் OLED டிஸ்ப்ளேவை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது.
No: 7
நாம் புதிதாக லேப்டாப் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றானது தான் பேட்டரி. Charge Faster, Last Longer, More Battery Life இது எல்லாம் வேண்டும் என்றால் நீங்கள் Lithium Ion Battery தேர்வு செய்ய வேண்டும்.
No: 8
நாம் வாங்கு லேப்டாப்பில் Laptop Onsite Warranty இருந்தால், நீங்கள் எந்த இடத்தில்அந்த இடத்திற்கு நேரடியாக வந்து லேப்டாப்பில் உள்ள பிரச்சனையை சரி செய்து கொடுப்பாங்க. பொதுவாக நாம் வாங்குகின்ற லேப்டாப்பிற்கு ஒரு வருடம் மட்டும் தான் வாரண்டி கொடுப்பாங்க. இருப்பினும் உங்களுக்கு கூடுதலாக வாரண்டி வேண்டும் என்றால் Additional Warranty-ஐ வாங்கிக்கொள்ளலாம்.
No: 9
நாம் இறுதியாக தெரிந்துகொள்ள வேண்டியது Accidental Damage Protection. ஒருவேலை உங்கள் லேப்டாப் டேமேஜ் ஆகிவிட்டது என்றால். அது Warranty-யில் க்ளைம் ஆகாது. ஆக அந்த நேரத்தில் Accidental Damage Protection-ஐ நாம் வாங்கி வைத்திருமத்தோம் என்றால் நம் லேப்டாம் ஏதாவது சேதம் அடைந்திருந்தால் அதனை சரி செய்து கொடுப்பார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information In Tamil |