Lease House vs Rent House in Tamil
வீடு என்றால் அனைவருக்கும் பிடிக்கும், அதுவும் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். சிலருக்கு அது ஒரு கனவாக இருக்கும். அந்த கனவை நிறைவேற சிலர் அயராமல் உழைக்கிறார்கள். அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் அந்த கனவுக்காக அதிகளவு மக்கள் அனைவரும் வாடகை வீடு, ஒத்திகை வீடுகளில் இருந்து கொண்டு தான் அவர்களின் கனவுகளை மேம்பட செய்கிறார்கள்.
அப்படி வாடகை வீட்டில் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு ஏற்படும் நல்லது என்ன ஒத்திகை வீடு சிறந்ததா வாடகை வீடு சிறந்ததா என்று இந்த பதிவின் வாயிலாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
Lease House vs Rent House in Tamil:
வாடகை வீடு நன்மைகள்:
மாதம் மாதம் வாடகை தொகையை மட்டும் கொடுத்து விட்டு குடியேறிவிடலாம் ஆனால் வீட்டு வாடகை மட்டும் ஒரு மாதம் வாடகையை மட்டும் யாரும் அட்வான்ஸ் வாங்குவதில் இல்லை அதிகமாக தான் அட்வான்ஸ் தொகை வாங்கிக்கொள்கிறார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் 5 மாதம் 10 மாதம் என தொகையை அட்வான்சாக வாங்கிக்கொள்கிறார்கள்.
வீடு பிடிக்கவில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் அட்வான்ஸ் திரும்ப பெற்றுக்கொண்டு வீட்டை காலி செய்துகொள்ளலாம்.
வாடகை வீடு பிரச்சனைகள்:
வீட்டு ஓனர் எப்போது காலி செய்ய சொல்கிறாரோ அப்போது நாம் காலி செய்து கொள்ள வேண்டும்.
வாடகை வீட்டுக்கு உள்ள சட்டம் ஒரு மாதம் வாடகையை மட்டும் அட்வான்சாக பெறவேண்டும் ஆனால் அப்படி யாரும் பெறுவதில்லை.
மாதம் மாதம் வீட்டு வாடகை போல் தண்ணீர் கட்டணம், மின்சாரக்கட்டணம் என பெரிய தொகை மாதம் கட்டவேண்டி இருக்கும்.
இதையும் செய்து பாருங்கள் 👉👉 சொந்த வீடு அமைய கார்த்திகை அன்று இந்த தீபத்தை மறக்காமல் ஏற்றுங்கள்..!
Lease House Benefits in Tamil:
மாதம் மாதம் வாடகை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீடு பார்த்து விட்டு வைத்து ஒரு நாள் சென்று 2 வருடம் அல்லது 3 வருடம் என ஒரு ஒப்பந்தம் செய்து வந்து விட்டால் 3 வருடத்திற்கு சொந்த வீடு போல் இருக்கலாம். எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. வீட்டுக்காரர் ஒத்திகை தினம் முடித்த பிறகு காலி செய்து கொள்ள வேண்டும்.
ஒத்திகைக்கு வீட்டு கொடுப்பவர்கள் பிசினஸ் செய்ப்பவராக இருப்பார்கள் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தொகை மிகவும் உதவியாக இருக்கும். அந்த தொகையை வைத்து அவர்கள் 3 வருடத்திற்கு நல்ல லாபம் பெற்றி இருப்பார்கள். நாம் வீட்டை காலி செய்யும் போது அந்த பணத்தை திரும்பி கொடுத்துவிடுவார்கள்.
Leasing House Disadvantages in Tamil:
வாடகை வீடு போல் அவ்வளவு எளிதாக கிடைக்காது தெருவிற்கு ஒன்று அல்லது 2 வீடு கிடைப்பதே பெரிது அதனை தேடி தேடி வாடகை வீட்டிற்கு செல்பவர்கள் அதிகம்.
மேலும் வீடு கொடுத்தது போல் இல்லை என்று பல காரணம் சொல்லி பாதி பணத்தை கொடுக்க தயங்குவார்கள்.
வீடு ஒத்திகைக்கு கொடுக்கும் பணத்தை வங்கியில் போட்டு வைத்தால் அதற்கு வட்டி அதிகமாக தான் இருக்கும். அதனை வைத்து நன்கு சம்பாதிப்பதை பார்க்கிறார்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |