மாதம் மாதம் பணம் செலுத்தாமல் வாழ்நாள் முழுவதும் இலவசமாக அனைத்து சேனல்களும் பார்க்க வேண்டுமா.?

Advertisement

இலவச டிவி சேனல் | Lifetime Free Channels On Dish Tv in Tamil

நம் முன்னோர்கள் காலத்தில் ஊருக்கு ஒரு டிவி இருந்தது. அனல் இன்றைய காலத்தில் ஹாலில் ஒரு டிவி, ரூமில் ஒரு டிவி என்று வளர்ந்துள்ளது. இதற்காக நீங்கள் மாதந்தோறும் பணம் செலுத்தி பார்த்து வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு வந்துவிட்டது. அதாவது நீங்கள் ஒரு முறை DD DD Free Dish வாங்குனீர்கள் என்றால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக டிவி சேனல்களை பார்க்கலாம். DD Free Dish பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

how dd free dish works | DD Free Dish information

DD இலவச டிஸ் 2004-ல் தொடங்கப்பட்டது. DD  டிஷ் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் மாதம் கட்டணம் செலுத்தாமல் ஒரே இலவச காற்று வழியாக செயல்படும் சேவையாகும். இவை அனைவரும் பயன் பெரும் வகையில் உள்ளது. இதற்கு நீங்கள் ஒரு முறை முதலீடு செய்து அதாவது 2000 ரூபாய் செலுத்தி டிஷ் மற்றும் செட் அப் பாக்ஸ் வாங்க வேண்டும்.

நீங்கள் DD இலவச டிஸ்ஸை ஆன்லைன் அல்லது உங்க ஊர் கேபிள் டிவி ஆப்ரேட்டர் மூலம் வாங்கி கொள்ளலாம். இதில் ஆரம்பத்தில் 33 சேனல்கள் மட்டும் இருந்தன. ஆனால் தற்போது 100-க்கும் மேற்பட்ட சேனல்களை வழங்குகிறது.

நீங்கள் டிவி அதிகமாக பார்க்க மாட்டேன். நியூஸ் தான் பார்ப்பேன் என்றால் இது உங்களுக்கு உதவியாக இருக்கும். ஏனென்றால் தமிழ் சேனல்கள் 12 தான் இருக்கின்றது. அவை MK Tunes MK Six Malai Murasu TV, 7S Music, Thanthi TV, Sahana TV, Nambikkai TV,  Salvation TV,  Sathiyam TV, Dheeran TV, Captain TV, Imayam TV போன்றவை மட்டும் தான் வழங்குகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement